வலயக் கல்விப் பணிப்பாளர் என்மீது போலிக் குற்றச்சாட்டு: கல்விக்காக சிறை செல்லவும் தயங்கமாட்டேன்

0
314

எனது அரசியல் இருப்புக்கு சேறுபூசும் வகையிலே மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப் பணிப்பாளர் என்மீது போலிக் குற்றச்சாட்டை சுமர்த்தி எனக்கெதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிருக்கு எதிராக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயத்தினுடைய அதிபர் கடந்த 26ம் திகதி பாடசாலை நிகழ்வொன்றில் தன்னை கலந்து கொள்ளுமாறு அழைத்தமையினால் எனது மாகான சபை நிதியொதுக்கீட்டின் மூலம் குறித்த பாடசாலைக்காக கொள்வனவு செய்யப்பட்ட அலுவலகத் தளபாடங்களைக் கையளிப்பதற்காக சென்றிருந்தேன்.

பாடசலை நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்குப் பின்னர் பாடசலையினை விட்டு வெளியேறுகின்ற போது உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி பயிலுகின்ற மாணவிகள் என்னைச்சுற்றி வளைத்துக் கொண்டு சுமார் ஒரு மாத காலமாக எங்களுக்கு அரசியல் விஞ்ஞான பாடம் கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லை எனவும் ஏற்கனவே அரசியல் விஞ்ஞானப்பாடம் கற்பித்த ஆசிரியை எந்தவித பதிலீடுமில்லாமல் கல்முனை கல்வி வலயத்திற்கு முதலமைச்சரின் சிபாரிசின் பேரில் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் எங்களுடைய கல்வியினைத் தொடர முடியாத வண்ணம் சிரமப்படுவதாகவும் முறையிட்டனர்.

மேலும் இப்பிரச்சிணைக்கான உடனடித் தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதன்போது மாகாணக் கல்விப்பணிப்பாளருடனும், வலயக் கல்விப்பணிப்பாளருடனும் தொடர்பு கொண்டு இதற்கான மாற்றீடினைச் செய்து தருவதாகக்கூறி பாடசாலையினை விட்டு வெளியேறினேன்.

அதன்பின்னர் மாகாண கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாகத் தெரிவித்தேன். அவர் தனக்கு அதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். அதே போல், நான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கும் சென்று வலயக் கல்விப்பணிப்பாளரிடம் குறித்த விடயம் சம்பந்தாமக தெரிவித்ததோடு, அப்பாடசாலை மாணவிகளின் எதிர்கால கல்வி நடவடிக்கையினைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கூறினேன்.

வலயக்கல்விப் பணிப்பாளர் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் நீங்கள் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் பேசும்படியும் வேண்டினார். தொடர்ந்து அவர் தான் இந்த இடமாற்றத்தினைச் செய்யவில்லை என்றும் கூறினார். அதற்கு நான் மாற்றம் செய்யபட்ட விடயத்தினை மட்டும் இங்கு கதைக்க வரவில்லை. பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் நீங்கள் இதற்கு மிக விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் கூறினேன். அப்பொழுது வலயக் கல்விப்பணிப்பாளர் எனக்களித்த பதில்கள் திருப்திகரமாக இருக்கவில்லை.

மாகாண சபையிலும் பொதுக்கூட்டங்களிலும் என்னைப்பற்றி விமர்சித்து வருபவராக இருக்கின்றீர்கள். இவ்வாறு என்னை விமர்சித்து விட்டு, என்னிடம் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென முனைகின்ற உங்களுக்கு உங்களினுடைய ஊரான ஏறாவூரிலே அதிகமான பாடசாலைகள் இருக்கின்றது. ஆகவே நீங்கள் ஏன் வெளியூர் பாடசலைகளின் பிரச்சனைகளில் மூக்கை நுளைக்க வேண்டும் எனக் கேட்டார்.

இந்நிலையில், நான் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் இடம் பெற்ற சம்பவத்தினையே உங்களிடம் முறையிட்டுள்ளேன் எனக்கூறியும், மேலும் தன்னை வலய கல்விப்பணிப்பாளர் கடிந்து கொண்டார். அதனால் ஆத்திரமடைந்து நீங்கள் இவ்வாறான கதிரையில் உட்கார்ந்து கொண்டு இவ்வாறு கதைக்க முடியாது என்று கூறிய போது, அவர் என்னை வெளியேறுமாறு கூறினார். இவ்வாறான சூழ்நிலையில் தான் தனக்கும் வலய கல்விப்பணிப்பாளருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தவிர வேறொன்றும் நடைபெறவில்லை அதன் பின்னர் வலயக்கல்விப் பணிப்பாளர் எனக்கெதிராக பொலீசில் முறைப்பாடு ஒன்றினை செய்தார்.

மேலும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மாகாண சபை உறுப்பினரின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட வலயக்கல்விப் பணிப்பாளருக்கு எதிராக நானும் ஏறாவூர் பொலிசிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடொன்றை செய்துள்ளேன். இன்று அப்பிரச்சினை நீதி மன்றம் வரைக்கும் செல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் எனக்குமிடையில் அன்றைய தினம் காலையில் ஏற்பட்ட பிரச்சிணையில் அவருக்கும் அவரது கடமைக்கும் நான் களங்கமேற்படுத்திருந்தால் சம்பவம் நடைபெற்ற மறுகனமே அவர் எனக்கெதிராக பொலிசில் முறைப்பாடு செய்திருக்க வேண்டும். மாறாக அவர் அன்றைய தினம் மாலையே எனக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார். இதனால் வலயக் கல்விப்பணிப்பாளரின் பின்னனியில் அரசியல் சக்திகள் செயற்படுவதாகவும் அறியமுடிகிறது.

குறிப்பாக, வலய கல்விப் பணிபாளருக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை நான் எதனையும் அவரிடம் அரசியல் ரீதியாகவோ, தனிப்பட்ட ரீதியாகவோ கேட்டதுமில்லை. அரசியலுக்கப்பால் நின்றே எமது கல்வி வலயம் தேசியத்திலே வழமை போல முதலாமிடத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக ஒத்துழைப்புக்களையே வழங்கிவருகின்றேன், வலய கல்விப்பணிப்பாளரை ஏற்கனவே நான் கடிந்து கொண்ட சந்தர்ப்பங்களை மனதில் வைத்துக்கொண்டு, என்னை பழிவாங்கும் செயலாகவே அவருடைய நடவடிக்கையை நோக்குகின்றேன்.

குறிப்பாக தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்பதனையும் மறந்து, குறித்த செயலினை அவர் தனது காரியாலையத்தினை விட்டு வெளியேறுமாறு கூறிய வார்த்தையானது, என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

குறிப்பாக அமைச்சர் அமீர் அலியுடன் இணைந்து மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தை அமைப்பதற்கு அரும்பங்காற்றியவன் என்ற வகையிலும் எனது பிரதேச கல்வி முன்னேற்றத்திற்கு உழைத்தவன் என்ற வகையிலும் எனது முயற்சியினாலும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் தேசிய ரீதியில் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் முதலிடங்கள் வகித்தது என்பதனை கூறுவதில் பெருமையடைகின்றேன்.

அவ்வாறு தேசிய ரீதியில் பேசப்பட்ட இக்கல்வி வலயமானது இப்போது தேசிய ரீதியில் ஏழாம் நிலைக்கு பின் தள்ளப்பட்டுள்ளதனை நினைத்தும் கவலையடைகின்றேன். இதற்கான முழுப் பொறுப்பையும் வலயக் கல்விப் பணிப்பாளரே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்போது இந்த வலயக் கல்விப் பணிமனையானது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இங்கு அரசியல் ரீதியான இடமாற்றங்களும் பழிவாங்கல்களும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதனையிட்டு கவலையடைகின்றேன்.. இதன்காரணமாகவேதான் இவ்வலயத்தின் கல்வி நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டுக் காணப்படுகிறது.

இவைகளை மக்கள் பிரதிநிதி என்றவகையில் தட்டிக்கேட்க முற்படுகின்ற போது வீன்குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. என்னைப்பொருத்தவரையில் ஏழை மாணவர்களின் கல்வி விடயத்தில் அநியாயங்கள் நடைபெறும் போது தட்டிக்கேற்பதற்கும், கல்விக்காக சிறை செல்லவும் தயங்கமாட்டேன்.

எனவே, எனது அரசியல் இருப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வலயக் கல்விப் பணிப்பாளரினால் அரசியல் பின்புலத்தோடு எனக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடு போலியானது எனவும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வீன் குற்றச்சாட்டுகளுக்கும் அஞ்சி அரசியலில் இருந்து ஒதுங்கமாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY