சஊதிக்கு வந்த சோதனை !!

0
837

-நௌபர் மௌலவி-

America and Saudi Arabia flags flying together for diplomatic talks
America and Saudi Arabia flags flying together for diplomatic talks

“யார் அநியாயக்காரனுடன் ஒத்துழைக்கின்றானோ அவன் அந்த அநியாயக்காரனால் சோதனைக்கு ஆளாவான்” என்றார்கள் இமாம் இப்னு தைமிய்யாஹ் (றஹ்) அவர்கள்.

இமாம் அவர்களின் இந்த வார்த்தையின் நிதர்சனத்தை நடைமுறை உலகில் நான் கண்கூடாகக் காண்கின்றோம்.

மத்திய கிழக்கில் ஐ எஸ் பயங்ங்கரவாதிகளின் தோற்றம் அங்குள்ள அரசியல் போக்குகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கின்றது.

1945ம் ஆண்டு சுவிஸ் கால்வாயில் அப்போதைய ச ஊதி மன்னன் அப்துல் அஸீஸுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரோஸ்பிளடுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்ட “பெற்றோலுக்குப் பகரமாக‌ பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அமைந்த அமெரிக்க சஊதி உறவு யங்கரவாத செயல்களுக்கு எதிரான நீதியை பெற்றுக்கொள்ளும் சட்டமூலம் அமெரிக்கா காங்கிரஸில் நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட முறிவடைந்து, இரு நாடுகளுக்குமிடையில் பகைமை புகைய ஆரம்பித்துள்ளது.

இதற்குப் பின்னணியில் பல்வேறு காரன‌ங்கள் உள்ளன.

சஊதியின் எண்ணை வளத்தில் அமெரிக்கா தங்கியிருக்க வேண்டிய தேவை இல்லாமல் போனது, சோவியத் ரஸ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பிராந்தியத்தில் போட்டி வல்லரசான ரஸ்யாவின் கொம்பியூனிஸ சித்தாந்தம் பரவாமல் இருப்பதை தடுக்கும் வேலை சஊதிக்கு இல்லாமல் போனது, ஐ எஸ் ஸை ஒழிக்க ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரானின் ஒத்துழைப்பு அவசியமானது போன்றவை பிரதானமானவை.

அதனால் அமெரிக்கா அவசர அவசரமாக ஈரானுடன் அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஈரான் மீதான தடையை நீக்கி அதன் முடக்கப்பட்ட பொருளாதாரத்தைப் பெற்றுக் கொள்ள வழிவகுத்ததுடன் தனது முதல் பங்காளி சஊதியை ஓரங்கட்டி ஈராணைக் கூட்டாளியாக்கிக் கொண்டுள்ளது. காரனம் ஈரான் அகன்ற பாரசீகக் கனவு , சீஆயிஸம் எனும் (குப்ர்) கொள்கைக்காக போராடும் நாடு. ச ஊதியிடம் தான் கொள்கையோ கனவோ கிடையாது அல்லவா?.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாநித்பதி ஒபாமா “அட்லன்டிக்” பத்திரிகைக்கு வழங்கிய ஒன்பதாயிரம் சொற்களுக்கு மேற்பட்ட நீண்ட, நெடிய பேட்டியில் “ச ஊதிக்காக அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்றும், சஊதி பயங்கரவாததுக்கு ஊக்கமளிக்கின்றது என்றும், ச ஊதி ஈரானுடன் நபுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலளிக்கப் புறப்பட்ட சஊதி இளவரசரும் முன்னால் உளவுத்துறைப் பொறுப்பாளருமான “துருக்கி அல் பைஸல்” , “லா யா செய்யித் ஒபாமா” (மிஸ்டர் ஒபாமா அப்படியல்ல) என்ற தலைப்பில் அஷ் ஷர்குல் அவ்ஸத்” பத்திரிகையில் ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அமெரிக்கா நடாத்தி வரும் “பயங்கரவாதத்துக் கெதிரான போர்” இல் சஊதி பங்களிப்பு செய்யவில்லையா? பயங்கரவதிகள் பற்றிய உளவுத் தகவல்களை தரவில்லையா? அமெரிக்காவின் பனப் பங்குகளை கூடிய விலை கொடுத்து வாங்கி அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்தவில்லையா? என்றெல்லாம் கூறியிருந்தார்.

அதாவது பச்சைப்பிள்ளைக்கும் புரியும் படி சொல்வதாக இருந்தால், அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் முஸ்லிம் தேசங்கள் மீதான நவீன சிலுவைப் போரில் நாங்கள் பங்களிகளாக இல்லையா?, அதனால் நலிவடைந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை மக்களின் செல்வத்தைக் கொட்டி முட்டுக் கொடுக்கவில்லையா?. ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர்களைக் காட்டிக் கொடுத்து கூட்டிக் கொடுப்பதை விட இழி செயல் செய்யவில்லையா என்று சுய வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் சஊதி தரப்பில் இருந்து அமெரிக்காவில் உள்ள தங்களது முதலீடுகளை மீள எடுத்துக் கொள்வோம்” என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதன் பின்னர் ரியாதிலும் வொஷிங்டனிலும் இரு பக்க பேச்சுவார்த்தைகள் இது தொடர்பில் நடாத்தப்பட்டு ப‌யங்கரவாத செயல்களுக்கு எதிரான நீதியை பெற்றுக்கொள்ளும் சட்டமூலம் அமுலுக்கு வராமல் ஒபாமா தன் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்துவார் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

ஆனால் பலரும் எதிர்வுகூறியபடியே, அமெரிக்கா விரும்பியது போலவே, தொண்ணூற்றி ஏழு உறுப்பினர்களில் ஒருவர் தவிர ஏனையவர்களுடைய வாக்களிப்பின் மூலம் ஒபாமாவின் வீட்டோ தோற்கடிக்கப்பட்டு சட்டம் அமுலுக்கு வந்து விட்டது.

செப்டம்பர் பதினொன்று தாக்குதல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை கோரிப் பெறும் உரிமையை வழங்கும் இச்சட்ட மூலம் ச ஊதி இத்தாக்குதலில் நேரடியாக சம்பந்தடவில்லை என்றாலும் கூட ச ஊதிக்கு எதிராகவே இது பெரும்பாலும் பிரயோகிக்கப்படும் என்பது வெள்ளிடை மலை. வலியவன் பிரயோகிப்பதுதான் சட்டம்!!

அமெரிக்காவில் ச ஊதியின் முதலீடுகளும் பன வைப்புகளும் சுமார் எழுநூற்றி ஐம்பது பில்லியன் டொலர்களும் நூற்றுப் பத்தொன்பது பில்லியன் சேமிப்புகளிம் உள்ளன. முதல் கட்டமாக இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் முடக்கப்படும். மொத்த நஷ்ட ஈட்டுத் தொகை 3.3 ட்ரில்லியன் டொலர்கள் என பொருளியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இத்தொகை உன்மையாக இருந்தால் சஊதியின் எண்ணை வளம் பல பத்து ஆண்டுகளுக்கு அமெரிக்காவுக்குக் கைமாறி விடும்.

ஏற்கனவே அமெரிக்காவை நம்பி, லிபியாவிலும் சிரியா மற்றும் ஈராக்கிலும் யமனிலும் யுத்தங்களுக்குள் வலிந்து தன்னை நுழைத்துக் கொண்டதன் காரனமாக பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் ச ஊதிக்கு இது ஒரு பெரிய இடி என்பதில் சந்தேகமில்லை.

ஆப்கானிலும் சிரியாவிலும் ஈராக்கிலும் பல்லாயிரக்கணக்கான மண்ணிக்கவும் பல மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கொண்று குவிப்பதில் அமெரிக்காவுக்கு ஒத்துழைத்த சஊதிக்கு வந்த சோதனை எதிரிக்கும் கூட வரக் கூடாத சோதனையாகும்.!!

அமெரிக்கா இவ்வாறு முதுகில் ,நெஞ்சில் , விலாவில் தனது தனது கூட்டாளிகளுக்குக் குத்துவது வழமையானதே. சஊதி எனும் மாட்டிடம் கறக்க முடிந்த அளவுக்கு பால் கறந்து விட்ட அமெரிக்கா இனி இறைச்சிக்காக‌ மாட்டை அறுக்க முடிவு செய்து விட்டது.

இதன் காரனமாமாகவே “நக்குகிற நாய்க்கு செக்கென்ன, சிவ லிங்கம் என்ன” என்ற பழ மொழிக்கு ஏற்ப கிருஸ்தவ ஆக்கிரமிப்பு நாடான அமெரிக்கா குத்த ஆரம்பித்ததும் யூத ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சஊதி முனைந்தது. இந்த முனைவு இனி துரிதப்படுத்தப்படும்.

முஸ்லிம்களா அமெரிக்காவா என வந்தால் அமெரிக்க பக்கம் சார்வதற்கு நாம் ஒன்றும் ச ஊதி போன்ற நயவஞ்சகர்கள் இல்லையே.. அதனால் இந்த விடயத்தில் நாம் மானசீகமாக சஊதி பக்கம் நின்றாலும் நிற்காவிட்டாலும் அமெரிக்காவின் சஊதி மீதான கோரப் பிடியில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.

(முதல் பந்தியை மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்)

LEAVE A REPLY