கட்சிக்கு துரோகமிழைத்த ஆரிப் சம்சுதீன்: உணர்வுகளை கருவறுக்கும் விதத்தில் அறிக்கை

0
616

கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை

இணைந்த வட கிழக்கு நிருவாகத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயங்களினாலே வட கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் தனித்தனியே இயங்கவேண்டுமென கிழக்கு மாகாண அரசியல் தலைமைகளும், கிழக்கு மாகாண புத்திஜீவிகளும், மக்களும் குரல் கொடுத்து வரும் இக்கால கட்டத்தில் தேசிய காங்கிரஸின் வாக்குப்பலத்தினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆரிப் சம்சுதீன் வாக்களித்த மக்களுக்கும், கட்சிக்கும் துரோகமிழைத்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் பதவியை வகித்துக்கொண்டு கிழக்கு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருவறுக்கும் விதத்தில் அறிக்கைகளை விடுகிறார் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

சுதந்திர கிழக்கின் நோக்கம் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் அண்மையில் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் பத்திரிகையாளர்கள் வினவிய போதே உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் வட , கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக இருந்த போது தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தோடும், புரிந்துணர்வோடும், ஒற்றுமையாகவும் வாழ்ந்துள்ளனர். குறிப்பாக தமிழ் மக்களுடைய சாத்வீக அரசியல் போராட்டங்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு வழங்கினர். வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட பின்னர்தான் வட கிழக்;கில் வாழ்ந்த தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் பல பிரச்சினைகளும் வண்முறைகளும் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக வட , கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல் தலைமைகளோடும் புத்திஜீவிகளோடும் எந்த விதமான கலந்துரையாடல்களுமின்றி வட கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாகாணமும், ஏனைய 07 மாகாணங்களை ஒன்றிணைத்து பெரும்பான்மையாக சிங்கள மக்களை; கொண்ட ஒரு மாகாணமும், மலையகத்திலே வாழும் தமிழ் மக்களுக்கும், நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் தன்னாட்சி அதிகார அலகு வழங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் வட மாகாண சபையிலே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். இத்தீர்மானம் இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச நாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாகாண முதலமைச்சர் அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போது முஸ்லிம்கள் தமிழ் பேசுவதனால் அவர்கள் தமிழர்கள் என்றும் இஸ்லாம் மதத்தினை தாங்கள் பின்பற்றுவதாக அவர்கள் வித்தியாசப்படுத்திக் காட்டுவதானது அரசியல் இலாபங்களுக்காகவே என்று கருத்துப்பட தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களும் தமிழ் பேசுவதனால் அவர்களும் தமிழர்களே என சர்வதேசத்திற்கு காட்டி வட கிழக்கை மீண்டும் இணைத்து முஸ்லிம் சமூகத்தை ஆளுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகவும்; முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தினையும், இஸ்லாம் சமயத்தினையும் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகவே வட மாகாண சபையின் முதலமைச்சரின் கூற்று அமைந்துள்ளது.

வட மாகாண முதலமைச்சரும், தமிழ் அரசியல் தலைவர்களும் வட கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதற்கும், தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுயாதீனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் வட கிழக்கு இணைப்புக்கு எதிராக எந்தவொரு தீர்மானத்தையும் முஸ்லிம் முதலமைச்சர் உட்பட முஸ்லிம் உறுப்பினர்களும் பிரேரனைகளை முன்வைத்து நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் வட கிழக்கு பிரிய வேண்டுமென நீதி மன்றம் சென்று வட கிழக்கு பிரிப்புக்கு காரணமாக இருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த விஜயசேகரவினால் கடந்த ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபையில் வட கிழக்கு இணைப்பிற்கு எதிராக கொண்டு வந்த தனிநபர் பிரேரனையை கிழக்கு மாகாண கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு இந்த பிரேரனை மாகாண சபையில் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் வழிமொழிந்து குறித்த மாகாண சபை உறுப்பினர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இந்தப் பிரேரனை சபையில் கொண்டு வர முடியாது என சபையில் எழுந்துநின்று ஆரிப் சம்சுதீன் தடுத்தார்.

அச் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெயந்த விஜயசேகர கிழக்கு மாகாணம் தனித்தே இருக்க வேண்டும் என மாகாண சபையில் மேசையில் ஏறி போராடி தனது கருத்தை தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புக்கான தீர்வுத்திட்டம் தொடர்பாக நமது நாட்டில் பல்வேறு விதமான யோசனைகள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலமையில் கடந்த மூன்று தசாப்த காலமாக போரினால் பாதிக்கப்பட்டு அதிகாரப் பகிர்வினை கோரிநிற்கும் வட கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் வட மாகாண சபை மக்கள் பிரதிநிதிகள் ஒன்றினைந்து அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவு போன்ற முன்மொழிவுகளை வட மாகாண சபையிலே சமர்ப்பித்து இம்முன்மொழிவுகள் மீதான விவாதம் வட மாகாண சபையில் முழுமைபெற்று இம்முன்மொழிவுகள் தீர்மாணங்களாக நிறைவேற்றப்பட்டு வட மாகாண சபையினால் மத்திய அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 21.06.2016இல் நடை பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கிழக்கு மாகாண சபை அதனுடைய முன்மொழிவுகளை தயாரித்து நமக்கான நியாயமான தீர்வுததிட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளையும் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து மக்கள் பிரதிநிகளின் கருத்துக்கள் பரிமாறப்பட்டு இம்முன்மொழிவுகள் இறுதியாக தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படும்.

இத்தீர்மானங்கள் நமது நாட்டிலே வாழும் பல்லின மக்களுக்கிடையில் ஐக்கியம் அமைதி, பரஸ்பரம் புரிந்துணர்வுகளை கட்டியெழுப்பக்கூடியதாகவும் சகல இன மக்களும் நன்மையடையக்கூடிய வகையிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் தனிநபர் பிரேரனை என்னால் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் முதலமைச்சர் உட்பட ஆளும்கட்சி உறுப்பினர்கள் இப்பிரேனையை நிறைவேற்றுவதற்கு தடைகளை விதித்தனர் இதனால் கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தீர்வு திட்டமாக கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்ற முடியாமல் போனது.

வட கிழக்கு தனியாகப் பிரிந்திரிக்கின்ற சந்தரப்பத்தில்தான் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நிம்மதியாகவும், சந்தோசத்துடன், இன ஐக்கியத்துடன் வாழ முடியுமென இந்த நாட்டில் பயங்கரவாதம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தனது உயிரையும் துச்சமென நினைத்து வட கிழக்கு தனியாகப் பிரிய வேண்டுமென தைரியமாக குரல் கொடுத்தார்.

தேசிய காங்கிரஸ_ம், அக்கட்சியின் தலைமையும் தமிழ் சமூகத்திற்கு எதிரானவர்களோ, அல்லது பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு வழங்கப்படவுள்ள அரசியல் தீர்வுத்திட்டத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. மாறாக கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் பிரிந்திருக்க வேண்டும். வட கிழக்கு பிரிந்திரிப்பதனால்தான் தமிழ், முஸ்லிம் மக்களுடைய உறவு தொடர்ந்தும் நீடிக்கும் என்பதனை ஆனித்தரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம். இதனைக் கிழக்கிலே வாழுகின்ற சில அரசியல் தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக வட கிழக்கிலே உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் வட கிழக்கு மாகாணங்கள் தனித்தே இருக்க வேண்டும் என தங்களுடைய நிலைப்பாட்டை தைரியமாக கூறிவரும் நிலையில் முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை மௌனமாக இருப்பதில் அர்த்தமுள்ளது என ஆரிப்சம்சுதீன் கூறியிருப்பது அக்கட்சியில் அவரின் அரசியல் இருப்பை தக்க வைப்பதற்காகன முயற்சியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY