குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி மரணம்

0
81

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை-தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருக்கடலூர் பகுதியில் குளிக்கச்சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி இன்று (29) மாலை 4.00 மணியளவில் திருகொணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை.திருக்கடலூர் .இலக்கம் 87 பகுதியைச்சேர்ந்த இராமையா முருகையா (63வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வீட்டுக்கு பின் புறமாக உள்ள கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY