(Poem) அன்றும் இன்றும் – அது

0
82

(நிஷவ்ஸ் )

பாலோடு பழரசங்கள்
பழையவரை மயக்கியது.
ரீலோடும் ரிங்டோனும்
இளையவரை இழுக்கிறது.
பட்டாடை கட்டுவது
பழையவரை கவர்ந்ததன்று.
பட்டும் படாமல் கட்டுவது
பற்றிக் கொள்ளும் புதியவரை.
ஓலை வேலி ஓட்டைக்குள்ளால்
ஒற்றைக் கண் பேசும் அன்று.
மூலையிலே உட்கார்ந்து
முகநூலில் சற் இன்று.
ஹாய்யும் ஹலோவும்
ஓயாமல் ஒலிக்கும் இன்று.
தேயும் பழசு அன்று
தெரியாதோர்க்கு சிரித்தாலே.
பாட்டா தேய அன்று
ரோட்டில் நடை – பார்ப்பதற்கு.
டேட்டா தீர இன்று
லேட்டாகித் தொடர்கிறது.
விடிய விடிய அன்று
விழி மூடா கனவு காண்பார்.
வீடியோ வீடியோவாய்
விழிக்கின்று வட்ஸ்அப் விருந்து.
அன்றைய சில இளைஞர்
அன்றாடம் செய்ததைத்தான்
இன்றைய இளசு சிலர்
அன்றொய்டில் செய்கின்றார்.
ஒன்று சரி ஒன்று பிழை
ஒருவருக்கும் சொல்ல ஏலா.
என்றாலும் இன்றிருக்கும்
இலக்ட்ரோனிக் இளசுபோல்
அன்றிருந்த ஆசாமிகள்
அளவு கடக்க முடியவில்லை.
ஆதலினால்
ஒப்பீட்டு ரீதியாக
உயர்ந்தது அக்காலம்

LEAVE A REPLY