தம்புள்ளை பள்ளி காணி விவகாரம் : பிரதமரிடம் முறைப்பாடு

0
262

தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் அச­மந்தப் போக்­கினால் பல வரு­ட­காலம் கடந்தும் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது.

இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­டா­விட்டால் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்­ப­டலாம் என மாத்­தளை மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் முறை­யிட்­டுள்ளார்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் மாத்­தளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் அலு­வி­கார விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில்,

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு பல­வ­ரு­டங்கள் கடந்­து­விட்­டன. பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றிக் கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு உகந்த வச­தி­யான காணி­யொன்­றினை அவர்கள் கோரி­னார்கள். அதற்­கி­ணங்க அண்­மையில் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்­ளையில் காணி­யொன்­றினை இனம் கண்­டுள்­ளது.

என்­றாலும் நகர அபி­வி­ருத்­திச்­சபை அதி­கா­ரிகள் தமது கட­மையில் அச­மந்தப் போக்­கி­னையே கடைப்­பி­டிக்­கி­றார்கள். பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் வாழும் குடும்­பங்கள் இடம்­பெ­யர்­வ­தற்­கான காணி இனம் காணப்­ப­ட­வில்லை. அப்­ப­கு­திக்கு பாதை மற்றும் குடிநீர் போன்ற உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அமைக்­கப்­ப­ட­வில்லை.

அத்­தோடு தம்­புள்ளை புனித பூமி­யி­லி­ருந்து அகற்­றப்­பட்ட கோவி­லுக்­கான காணியும் இது­வரை இனம் காணப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலை தொடர்ந்தும் நீடித்தால் தம்­புள்ளை பள்­ளியை அகற்­று­வ­தற்கு முன்­புபோல் சவால்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். இதனால் அங்கு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு பாதிக்­கப்­படும்.

தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­மகா விகா­ர­hதி­பதி இனா­ம­லுவே தேரர் பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு பல முயற்­சி­களை மேற்­கொண்டார்.

ஒரு தடவை பாரா­ளு­மன்­றத்­துக்கும் வந்து எம்­முடன் கலந்­து­ரை­யா­டினார். இவ்­வாறு அனை­வரும் தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் ஒரே கருத்­தினைக் கொண்­டி­ருக்­கையில் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தனது கட­மையை பிற்­போட்டு வரு­கி­றது என்றார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­க­சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்­தீனைத் தொடர்பு கொண்டு வின­விய போது அவர் பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்தார். நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தம்­புள்­ளையில் தற்­போது பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்கும் இடத்­தி­லி­ருந்து சிறிது தூரத்தில் பள்­ளி­வா­ச­லுக்­கென்று காணி­யொன்­றினை இனம் கண்­டுள்­ளது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளுக்கும் காணி காண்­பிக்­கப்­பட்­டது. காணி மது­பா­ன­சா­லைக்­க­ருகில் அமைந்­துள்­ளதால் வேறு காணி வழங்­கு­மாறு கோரிக்கை விடுத்தோம்.

பல மாத கால­மா­கியும் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை எவ்­வித மாற்று ஏற்­பா­டு­களும் செய்­ய­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு மாற்றுக் காணிகளுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கைகள் மந்த கதியிலே நடைபெறுகின்றன.

இது தொடர்பாக அமைச்சர்களான கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரை நேரில் சந்தித்து பள்ளிவாசல் நிர்வாக சபை கலந்துரையாடவுள்ளது என்றார்.

Source: Vidivelli

LEAVE A REPLY