“நிஜம்” சமூக அரசியல் விழிப்புணர்வு தமிழ் வாரப் பத்திரிகை வெளியிட்டு வைப்பு

0
235

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“நிஜம்” எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக அரசியல் விழிப்புணர்வு தமிழ் வாரப் பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு புதன்கிழமை (செப்ரெம்பெர் 28, 2019) பிற்பகல் அஞ்சல், அஞ்சல் சேவைகள், மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சின் அஞ்சல் தலைமையக கேட்போர் இடம்பெற்றது.

நிஜம் வெளியீட்டு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எல்.எம். மஸீஹுதீன்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஞ்சல், அஞ்சல் சேவைகள், மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் சமூக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான பெ. முத்துலிங்கம், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தம்பு சிவசுப்பிரமணியம், பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான எம்.எஸ்.எம். அனஸ் உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்தர்களும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

20 பக்கங்களைக் கொண்ட இந்த தேசிய தமிழ் வாரப் பத்திரிகை பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரப் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில் நிஜம் வெளியீட்டு நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.எல்.எம். மஸீதீன் தலைமை உரையை நிகழ்த்தினார். கூடவே, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளரும் சமூக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான பெ. முத்துலிங்கம், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தம்பு சிவசுப்பிரமணியம், பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைத் தலைவரும் எழுத்தாளரும் ஆய்வாளருமான எம்.எஸ்.எம். அனஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

LEAVE A REPLY