ஊர் வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகானினை ஷிப்லி பாறூக் நேரில்சென்று பார்வை

0
201

(எம்.ரீ. ஹைதர் அலி)

காத்தான்குடி ஊர் வீதியில் அமைக்கப்பட்டுவரும் வடிகானினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் நேரில்சென்று பார்வையிட்டார். இவ்விஜயத்தின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள் தொளில்நுட்ப உத்தியோகத்தர்கள் காத்தான்குடி நகரசபையின் செயலாளர் சாபி மற்றும் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர்களையும் குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்ற கிழக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்கு புணரமைப்பு வேளைகளில் ஈடுபடும் பொறியியலாளர், தொழில்நுட்பவியலாளர்களை சந்தித்து புணரமைப்பு பணிகள் தொடர்பான விடயங்களை கேட்டறிந்துகொண்டார்.

இப்புணரமைப்பு வேலைகளை பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் புணரமைப்பு பணிகளுக்கான தன்னுடைய ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதன்போது காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திகளிலும் பாதுகாப்பு முறைமை பற்றி போதியளவு கவனம் செலுத்தப்படாமை பற்றி சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் ஊர் வீதிக்கான வடிகானும் அத்தைகைய அபிவிருத்திகளுள் ஒன்றாக அமையக்கூடாது என்ற அடிப்படையில் மெத்தைப்பள்ளி வீதி – ஊர் வீதி சந்தி வளைவுகளில் வடிகானினை அமைக்கும் போது பாதுகாப்பான முறையில் போக்குவரத்துக்களை மேற்கொள்ளக்கூடியவாறு வடிகானினை அமைப்பதற்கும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் ஊர் வீதி – கபுரடி வீதி சந்தியினூடாக ஆற்றங்கரைக்கு செல்லும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடிகான் மற்றும் பழைய வடிகான் என்பவற்றையும் இதன்போது மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பார்வையிட்டார்.

LEAVE A REPLY