வெண்புள்ளிகளை குணப்படுத்தும் மருத்துவ முறைகள்

0
141

வயிற்றில் உள்ள கிருமிகள், சர்க்கரை நோய், வெயில் படாதது, வைட்டமின் ஏ, டி சத்துக்கள் குறைபாடு காரணமாக வெள்ளி புள்ளிகள் ஏற்படுகிறது. இதை குணப்படுத்தும் முறைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். துத்தி விதைகளை பயன்படுத்தி வெண்புள்ளிகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துத்தி விதைகள், பனங்கற்கண்டு. 2 துத்தி விதைகளை எடுத்து நீர்விட்டு அலசியபின் பனங்கற்கண்டு சேர்க்கவும். இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி இரவு தூங்கப்போகும் முன்பு குடித்துவர ஊட்டச்சத்து குறைபாடு நீங்கி வெண்புள்ளிகள் சரியாகும்.

துத்தி இலைகள் மூலம் நோய்க்கு மருந்தாகிறது. வேர் பகுதி சிறுநீரக பழுதை சரிசெய்கிறது. விதைகளை தேனீராக்கி குடிப்பதால் வயிற்றில் உள்ள கிருமிகள் விலகி வெண்புள்ளிகள் விரைவில் மாற துவங்கும். கார்போக அரிசியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கார்போக அரிசி, மஞ்சள் பொடி, தேன். கார்போக அரிசியை நீர்விட்டு சுத்தப்படுத்தி காயவைத்து பொடி செய்து அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். சிறிது தேன் விட்டு கலந்து காலையில் உணவுக்கு முன்பு சாப்பிட்டு வர வெண்புள்ளிகள் மறையும்.

கார்போக அரிசி பொடி, மஞ்சள் பொடியை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து வெண்புள்ளிகளுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கார்போக அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. செங்கொன்றையை பயன்படுத்தி வெண்புள்ளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். செங்கொன்றை மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் வில்வப்பழத்தின் ஓடுகள், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிப்பதால் வெண்புள்ளிகள் சரியாகும். செங்கொன்றை மரம் சாலை ஓரங்களில் இருக்கும். கொத்துக்கொத்தான பூக்களை கொண்டிருக்கும். வெண்புள்ளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது.

இதனுடைய பூக்களை தேனீராக்கி குடிப்பதாலும், பூக்களை அரைத்து பூசுவதாலும் வெண்புள்ளிகள் சரியாகிறது. சந்தன பொடியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதை வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் இரவு நேரத்தில் பூசி வைத்து காலையில் கழுவி வர வெண்புள்ளிகள் சரியாகும். தோல் பழைய நிறத்துக்கு மாறும். சந்தனம் தோல்நோய்களை போக்கும் தன்மை கொண்டது. வெண்புள்ளிகள் வராமல் தடுக்க சூரிய ஒளி மிகவும் முக்கியம். கேரட், பப்பாளி ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. உதடு, நாவில் ஏற்படும் வெடிப்பை சரிசெய்யும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திருநீற்றுபச்சை இலையை மென்று சாறு படும்படி வைத்திருந்தால் உதடு, நாவில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும்.

-Dinakaran-

LEAVE A REPLY