மலேசிய விமானத்தை வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை

0
177

இரண்டு ஆண்டுக்கு முன் மாயமான மலேசிய விமானம் எம்எச் 17ஐ ரஷ்ய ஏவுகணை சுட்டு வீழ்த்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி புறப்பட்ட மலேசிய விமானம் எம்எச் 17 திடீரென மாயமானது. இது தொடர்பாக நெதர்லாந்தை சேர்ந்த புலனாய்வு மையம் நடத்திய விசாரணையில் அந்த விமானத்தை ரஷ்ய ஏவுகணை சுட்டுவீழ்த்தியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நெதர்லாந்தின் புலனாய்வு போலீஸ் அதிகாரி வில்பர்ட் புலேசன் கூறுகையில், மலேசிய விமானம் கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஏவுகணையால் அதை சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 298 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இதற்கிடையே, இந்த விசாரணை அறிக்கை பாரபட்சமானது என்றும், தங்கள் மீது வேண்டும் என்றே குற்றஞ்சாட்டப்படுவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

-Dinakaran-

LEAVE A REPLY