சீனாவில் சூறாவளியுடன் கடும் நிலச்சரிவு : மக்கள் பாதிப்பு

0
107

சீனாவின் கிழக்கு பகுதியில் சிஜியாங் மலை பகுதியில் கடும் சூறாவளிக் காற்றுடன் பெய்த கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால் சுகுன் கிராமத்தில் ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. நிலச்சரிவில் சிக்கிய 27 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 18,000-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் கிழக்கு பகுதியில் கடும் மழை பெய்துள்ளதோடு, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

-Dinakaran-

LEAVE A REPLY