காத்தான்குடி அரசியல் களம் வாட்ஸ்அப் குழுவினால் நிதி உதவி..!

0
321

(முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடியை மையப்படுத்தி இயங்கி வரும் நவீன தொழிநுட்பமான வாட்ஸ்அப் இல் உருவான “காத்தநகர் அரசியல் களம்” குழுமதினால் சமூக சேவைப்பணிள் முன்னெடுக்கப்படுவதோடு பாரிய அளவிலான நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவிகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் பணிப்பாளர்களான் AGM.ரிஸ்வி மற்றும் பசீர் RKC ஆகியோரின் வழிகாட்டலில் முற்றிலும் சமூக நோக்கோடு பணியாற்றி வரும் இக்குழுமம் எதிர்காலங்களில் மாவட்டம்,மாகாணம் தாண்டி தமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளமை இக்குழுமத்தின் மற்றுமொரு மைல் கல்லாகும்.

ஆரம்ப கட்டமாக கா.குடி பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்ததை தொடர்ந்து அவருக்கு 52000 ரூபாய் பணமும் அண்மையில் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்று காணமல் போனவரின் குடுமப்த்திற்கு சிறிய பண உதவி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு அக்குடும்பத்திற்கு எதிர்காலத்தில் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது சுயதொழில் முயற்சிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் ரிஸ்வி தெரிவித்தார். இவ்வாறு கட்சி வேறுபாடுகளை மறந்து சிறப்பாக செயலாற்றி வருகின்ற அரசியல் களத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை வழங்கி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

LEAVE A REPLY