20 ஓவர் போட்டி: பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி

0
181

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் விளையாட அழைத்தார்.

அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்னே எடுக்க முடிந்தது. சாமுவேல்ஸ் அதிகபட்சமாக 59 பந்தில் 42 ரன் (3 பவுண்டரி) எடுத்தார். இமாத் ஹாசிம் 21 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் 34 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) பாபர் ஆசம் 27 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் பெற்ற ஹாட்ரிக் வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது.

உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் 3 ஆட்டத்திலும் தோற்றது பரிதாபமே.

அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் தொடர் நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற 30-ந்தேதி சார்ஜாவில் நடக்கிறது.

–Malai Malar-

LEAVE A REPLY