அபுதாபியில் இருந்து சென்ற ETIHAD விமானம் அவசர தரையிறக்கம்

0
228

அபுதாபியில் இருந்து நேற்று சிட்னி நோக்கி எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானம் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் உள்ள இரண்டு என்ஜின்களில் ஒன்று செயலிழந்துவிட்டது. இதனை கண்டறிந்த விமானி, உடனடியாக அபுதாபியை நோக்கி விமானத்தை திருப்பினார்.

மேலும் அபுதாபி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. தரையிறங்க அனுமதி கிடைத்ததும், குறிப்பிட்ட ஓடுபாதையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். இத்தகவலை எத்திஹாட் நிறுவன செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜகார்த்தா நோக்கி சென்ற எத்திஹாட் விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக கடுமையான காற்று வீசியதால் விமானம் குலுங்கியது. இதில், பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 31 பேர் காயமடைந்தனர்.

-Malai Malar-

LEAVE A REPLY