ராஜபக்ஷாக்களுக்கு முஸ்லிம்களுடன் குரோதமில்லை – முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ

0
257

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

ராஜபக்ஷாக்கள் முஸ்லிம்களுடன் எந்தவித குரோதமும் இல்லையென முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை, நெளும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

ஜனாதிபதியோ, ராஜபக்ஷாக்களோ முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் ஒரு காலமும் குரோதம் இல்லை. ஆகவே உண்மையிலேயே சில சம்பவங்கள் நடைபெற்ற போது ஜனாதிபதியும் நானும் முஸ்லிம்களின் சார்பாகத்தான் நின்றோம்.

சில பல சக்திகள் அதனை ஊருவிச் சென்று விட்டது. அதனால்த்தான் இந்நத விபரீதம். ஹலால் விடயம் வருகின்ற போது, உயர் பதவி வகிக்கின்றவர்கள் அதற்கு விரோதமாக நின்றார்கள். முஸ்லிம்களுடைய மார்க்கக் கடமைகளிலே அவர்களுக்கு எந்த விதமான இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது.

மார்க்க சம்பந்தமான விடயங்களுக்கு அவர்களுக்கு கொடுங்கள் என்று முதலாவது அனுப்பியது எங்களுடைய செய்திதான். ஆகவே நடந்தது நடந்து விட்டது. நாங்கள் நிறைய அபிவிருத்திகள் செய்திருக்கிறோம். கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்திருக்கிறோம். நிம்மதியாக வாழ சிறந்த சூழலை சிங்கள முஸ்லிம் மக்களுக்கு உருவாக்கித் தந்து இருக்கின்றோம். இதெல்லாம் செய்தது நாங்கள்.

மங்கள சமரவீர பலஸ்தீனத்திற்கு விரோதமாக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களித்தார். அவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்தார். வாக்களிக்க வேண்டாம் என்று கூறியும் அதனை மீறி வாக்களித்ததன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ அவரை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கினார். இதுதான் வரலாறு. முஸ்லிம்கள் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் எங்களுக்கு நல்லதொரு இடம் இருக்குறது. மஹிந்த எப்பொழுதும் முஸ்லிம்களை மதிப்பவர், நேசிப்பவர் என்றார்.

இந்நிகழ்வில், முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், குருணாகல் சத்தார், முன்னாள் நிதியமைச்சரின் மகன் மபாஸ் முஸ்தபா, பேருவளை முன்னாள் தலைவர் மில்பர் கபூர், அலவி மௌலானாவின் புதல்வர்கர்கள் நகீப், நஜீப் மௌலானா, வெலிகம தலைவர் ஹுசைன் முஹம்மட், கொழும்பு இல்யாஸ் ஹாஜியார், பணந்துறைபிரதேச சபை உபதலைவர் நிபாஸ், மல்வானை இஸ்மாயில் ஹாஜியார், கிழக்கு மாகாண, மட்டக்களப்பு, மன்னார் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்தவர்களும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

LEAVE A REPLY