கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் விபத்து: இருவர் படுகாயம்

0
192

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதி கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இருவர் போக்குடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் இன்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் திருகோணமலை-கன்னியா, மாங்காய் ஊற்று பகுதியைச் சேர்ந்த வை.சுஜிந்தன் (25 வயது) மற்றும் அவரது நண்பரான எம்.ஜேசுராஜ் (26 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

மேசன் வேலை செய்து வரும் இருவரும் மது போதையில் வீட்டுக்கு செல்லும் போது வேகமாகச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

20160928_160605 20160928_160607

LEAVE A REPLY