பல கோடி ரூபாய் செலவில் விசினவ பகுதியின் பாதைகள் உற்பட நீர்வினியோகத் திட்டங்கள் ஆரம்பம்

0
152

-ரிம்சி ஜலீல்-

தேசியத் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தொரணேகெதர-மடலஸ்ஸ கிராமிய குடிநீர் வினியோக திட்டத்திற்காக குளாய் பெறுவதற்கு 1கோடி 20 இலச்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பாறிய குடிநீர் வினியோகத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ஏறக்குறைய 1200 வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்ய இருப்பதனால் இன்னும் ஓர் ஆழ் கிணறு தோண்டுவதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தொரணே கெதர மடலஸ்ஸ அறக்கியாள கெகுணகொல்ல கொதலாவவ நிதுல்லகஹபிடிய தம்பிடிய போகஹவெல போன்ற பிரதேசங்களுக்கும் இரண்டாம் மூன்றாம் கட்டமான நடவடிக்கைகளின் கீழ் மேலும் பல பகுதிக்கான நீர்வினியோகத்திட்டத்தை ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும்.

அதே போன்று குருநாகல் மாவட்டத்தின் விசினவ பகுதியின் சியம்பலாகஸ்கொடுவ கெகுணகொல்ல மடலஸ்ஸயின் ஊடாக தொரணே கெதர பாதைகள் கார்பெட் பாதைகளாக மாற்றுவதற்க்கான திட்டத்திற்க்கு ரோட்டுக்கு முதல் கட்டமாக 8 கோடியே 22 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பதையை செய்வதற்க்காக அனைத்து கிராம மக்களும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றினைய வேண்டும் என்றும் தயவு செய்து இவ் அபிவிருத்தியை தடைசெய்யும் எந்த வேலையையும் அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்..

LEAVE A REPLY