ஜெனீவாவுக்கு அழைத்து செல்லப்பட்ட யாழ் முஸ்லிம்கள்

0
755

15(U.H. Hyder Ali)

இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலை புலிகள் மூலம் வெளியேற்றி 26 வருடத்தை எட்டி விட்டது. உலகில் எந்த ஒரு சமூகமும் அனுபவத்திராத துன்பத்தை இலங்கையில் எமது முஸ்லிம்கள் இந்த யுத்தத்தினால் அனுபவித்தார்கள்.

சுமார் ஓரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 26 வருடகாலமாக தனது சொந்த பூமியை இழந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிளேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற அவல நிலை. இன்று யுத்தம் முடிந்தும் இவர்கள் தமது சொந்த பூமிக்கு செல்ல முடியாமல் படுகின்ற துன்பங்கள் இன்னோரன்ன.

இந்த நிலையில் 26 வருடங்களிளின் பின்பு ஐரோப்பாவில் வாழும் யாழ் முஸ்லீம் ஒன்றினைந்து ஒரு அமைப்பாக செயட்பட முன்வந்துள்ளார்கள் உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

26 வருடங்களிளின் பின்பு ஒன்று பட்ட இந்த யாழ் முஸ்லீம்களை ஜெனிவா என்ற மாயையை காட்டி அவர்களது திசையை திருப்பி அரசியல் லாபம் தேட முட்பட்ட அந்த குள்ள நரிகள் யார்?

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும். 1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னரும், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னிலங்கையில் ஜே.வி.பியை அடக்குவதற்காக அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல் தொடர்பாக சிறிய அளவில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பேசப்பட்டாலும் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தான்.

1988களின் பின்னர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்சவும், 1990களின் பின்னர் குமார் பொன்னம்பலம் போன்றவர்களும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்களில் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடக அவர்களின் பிரதிநிதிகளாகவே கலந்து கொண்டனர்.

7841995ஆம் ஆண்டுகளின் பின்னர் பிரான்ஸ் தமிழர் மனித உரிமை அமைப்பின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் உட்பட மிகச்சிலரே இக்கூட்ட தொடர்களில் கலந்து கொண்டனர்.

2009ஆம் ஆண்டுகளின் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்கள் இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் மட்டத்திலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களிலும் சரி பேசு பொருளாக மாறியிருக்கின்றன.

நாங்கள் ஜெனிவா செல்கிறோம் என பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டு விட்டு ஜெனிவா வரும் தமிழ் அரசியல்வாதிகள் எதை சாதித்தார்கள் என்றால் அது வெறும் பூச்சியமாகவே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் மூன்று தரப்புக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்,

1. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்.

2. அரசசார்பற்ற நிறுவனங்கள்.

3. ஊடகத்துறை பிரதிநிதிகள்.

இந்த மூன்று தரப்பையும் தவிர வேறு எவரும் இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது. நாடுகளின் அரச பிரதிநிதிகள் மட்டுமே பிரேரணைகள் மீது விவாதத்தில் பேச முடியும். வாக்களிக்க முடியும்.

அரச பிரதிநிதிகளை தவிர இலங்கையிலிருந்து வரும் ஏனையவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவே கலந்து கொள்கின்றனர்.

இலங்கையிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஏனையவர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே கலந்து கொள்ள முடியும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டம் நடைபெறும் சமகாலத்தில் இக்கட்டிட தொகுதியில் முறைசாரா கூட்டங்களும் நடைபெறுவது வழமை. இக்கட்டிட தொகுதியில் சுமார் 40 சிறிய மண்டபங்கள் ஒலி அமைப்பு மற்றும் சகல வசதிகளுடன் உள்ளன. கையில் பணம் இருந்தால் எத்தனை மண்டபங்களையும் எத்தனை தடவைகளும் பதிவு செய்து தமக்கு வேண்டியவர்களை அழைத்து கூட்டங்களை நடத்த முடியும்.

நாடுகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கு நாடுகளின் பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் செல்வார்கள்.

ஆனால் இந்த யாழ் முஸ்லீம்கள் கலந்துகொண்டு அவர்களுக்கு அவர்களாலயே கூட்டம் நடத்தி பேசிவிட்டு வந்த இந்த நிகழ்வுக்கு இனாமாகதான் மண்டபம் கிடைக்கப்பெற்றது. ஏன் என்றால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு இந்த மண்டபம் இனமாகவே வழங்கப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு அரச சார்பற்ற அமைப்பின் பெயரில் தான் இந்த மண்டபம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

16இந்த ஐரோப்பாவில் வாளும் யாழ் முஸ்லிம் அமைப்பு எனும் இந்த அப்பாவி உறுப்பினர்களுக்கு ஜெனிவா சம்பந்தமான எந்த ஒரு நிர்வாக கட்டமைப்பு சம்பந்தமான போதிய தெளிவு இல்லாததினால் யாரோ ஒருவர் இவர்களது கழுத்தில் ஏரி சவாரி செய்ய முட்பட்டிருக்கிறார் என்பது வெளிட்சம்.

ஜெனிவா சம்பந்தமாக ஆசையை இவர்களுக்கு ஊட்டியதும் இவர்களும் ஐ .நா மனிதஉரிமை அமைப்பின் செயலாளர் நாயகத்தை சந்தித்து மகாஜர் கையளிக்க இருப்பதாகவும் பல வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதாகவும் அரபுநாட்டு பிரதிநிதிகளையும் ஜெனிவாவில் சந்திப்பதாகவும் கூறி முஸ்லிம்களுக்கு சம்பந்தமான இணையதளங்களுக்கு செய்திகளை வழங்கினார்கள் , பலரை தொடர்புகொண்டு தகவல் திரட்டினார்கள் .

இந்த யாழ் முஸ்லீம் அமைப்புக்கு இறுதியில் நடந்தது வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி போன்ற கோமாளிகளுக்கு நடந்ததே.

சாகன் சொரு சாப்பிட்டுவிட்டு ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இக்கட்டிட தொகுதியில் இருக்கும் ஒரு அரயை அவர்களாகவே காசு கொடுத்து வாங்கி ஐரோப்பாவில் பல பக்கங்களிலும் இருந்து யாழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கு சென்றிருந்த சுமார் 20 யாழ்ப்பாண முஸ்லிம் பிரதிநிதிகளும் அவர்களுக்குள்ளேயே கூட்டத்தை நடத்தி பேசிவிட்டு அங்கு போட்டோ எடுத்து அதுவும் முஸ்லிம்களுக்கே சொந்தமான இணையதள செய்திகளுக்கு அனுப்பி தங்களை யாழ் முஸ்லீம்கள் மத்தியில் ஹீரோக்களாக காட்ட எடுக்கும் இந்த ஏமாற்று வலி.

கடந்த பல வருடங்கலாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் தமிழ் வங்குரோத்து அரசியல் வாதிகளும் ஜெனிவாவை காட்டிக்காட்டியே தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் 26 வருடங்களின் பின்பு இப்பொழுது யாழ் முஸ்லிம்களையும் ஏமாற்ற ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது.

இது அவர்களின் தவறு அல்ல, அவர்கள் ஜெனிவாவில் ஏதோ சாதிக்கப்போகிறார்கள் என்ற பிம்பத்தை வளர்ப்பதுதான் தவறு, யாழ் முஸ்லிம்கலிடத்திலும் இந்த பிம்பத்தை வளர்த்த கோமாளிகளின் தவறு.

ஜெனிவாவுக்கு வருபவர்களுக்கு எந்த இராஜதந்திரிகளையும் சந்திப்பது கிடையாது. சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையாளரும் சரி, தூதுவர்கள் இராஜதந்திரிகளும் சரி, இலங்கை என்று வரும் போது இரு தரப்பைத்தான் சந்திக்கிறார்கள்.

ஒன்று அரச தரப்பு பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அல்லது ஜெனிவா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, இரண்டாவது தரப்பாக தமிழர்களின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மட்டுமே சந்தித்திருக்கின்றனர்.

இதைத்தவிர ஜெனிவா செல்வதாக கூறிவிட்டு வந்த தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இராஜதந்திரிகளை அல்லது நாடுகளின் தூதுவர்களை ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்தித்ததாக எந்த தகவலும் இல்லை. வரலாறும் இல்லை.

யாழ் முஸ்லிம்கல் ஜெனிவா சென்ற விடயத்தில் இவர்கள் எந்த ஒரு இராஜதந்திரிகளையோ அல்லது நாடுகளின் தூதுவர்களையோ ஐ.நா.மனித உரிமை ஆணையாளரையோ சந்திக்கவில்லை. ஆனால் இதன் விளைவு எவ்வளவு பாரதூரமாக தென் இலங்ககையில் இருக்கப்போகிறது. இந்த புலம்பெயர் யாழ் முஸ்லிம்களினுடைய அரசியல் ராஜதந்திர அணுகுமுறையில் சர்வதேச தொடர்பாடல் துறையில் பாரிய ஒரு பின்னடையவு இருப்பதை அவதானிக்க முடிகிறது.

யாழ் முஸ்லீம்களது வெளியேற்றம் சம்பந்தமாக ஆய்வுகளை மேட்கொண்ட கலாநிதி ஹஸ்புள்ளாஹ், 1990 தொடக்கம் இதுவரை காலம் கலத்தில் இருந்து செயட்படுகின்ற மௌலவி சுபியான், மாகாணசபை உறுப்பினர் அஷ் ஷேய்க் அஸ்மின் போன்றோருக்கும் ஏனைய புத்திஜீவிகளும் பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன.

இதுபோன்ற அமைப்புக்களை கோமாளிகளதும் வயிற்றுப்பிழைப்பு நடத்துபவர்களிடமிருந்தும் காப்பாற்றி அரசியல் ராஜதந்திர அணுகுமுறைகள் பற்றிய தெளிவுகளையும் களத்தின் தேவைகள் பற்றிய யதார்த்தத்தையும் , தரவுகளையும் வழங்கி அவர்களிடம் இருந்து யாழ் மண்ணுக்கு பயனைப்பெற.

ஜெனிவா செல்கிறோம், சாதித்து வருகிறோம் என மக்களுக்கு பிரசாரம் செய்பவர்கள் தாங்கள் ஜெனிவாவில் எதைத்சாதித்தோம் என்பதையும் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY