குடிநீர் எங்களுக்கு வேண்டும். அது எங்களது உரிமை; மட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் பேரணி

0
216

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

1மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பதுளை வீதியை அண்டியுள்ள கிராம மக்கள் இன்று (28) புதன்கிழமை மட்டக்களப்பு நகருக்கு வந்து குடிக்கும் நீரைப் பெற்றுக் கொள்வது எங்கள் உரிமை ‘எங்களுக்கும் குடிநீர் வேண்டும்’ என்று கவன ஈர்ப்புப் போராட்டம் நடாத்தினர்.

ஏ5 மட்டக்களப்பு – பதுளை வீதியில் உள்ள கொடுவாமடு தொடக்கம் மங்களகம வரையான கிராமங்களில் நிலவும் மிகவும் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டு குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் அதிகாரிகள் இந்த விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை என மக்கள் தமது அங்கலாய்ப்பை வெளியிட்டனர்.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகில் இந்த கவன ஈர்ப்புப் பேரணி இடம்பெற்றது. இறுதியில் பேரணி மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் வரை சென்று தங்களது குறைபாடுகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சர்ள்ஸிடம் கைளியளித்தனர்.

02மகஜரின் பிரதிகள் ஜனாதிபதி, கிழக்கு மாகாண முதலமைச்சர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.

பதுளை வீதியிலுள்ள சமூக மட்ட அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் இதுவரையில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை, பிரதேச சபையினால் நாளாந்தம் 2 பவுஸர்கள் மூலம் வழங்கப்படும் நீர் எமக்குப் போதாது, கூலி வேலைக்கு செல்கின்றவர்கள் குடிநீர் தேடியலைவதால் வேலையும் இல்லை வருமானமும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது, ஆறுகளில் குடி நீரைப் பெறுவதால் இலகுவில் தொற்று நோய்க்கு ஆளாகுதல், காட்டு விலங்குகள் மற்றும் விஷ ஜந்துக்களால் ஆபத்துக்களை எதிர் நோக்குவதாகவும் தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்.

01

LEAVE A REPLY