15.8 கோடி ரூபா பெறுமதியான கார் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 158 மில்லியன் ரூபா பெறுமதியான Rolls Royce Wraith எனும் ஆடம்பரமான காரை இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இறக்குமதி செய்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இறக்குமதி செய்யப்பட்ட மிக அதிக விலை மதிப்பு கொண்ட கார் இதுவாகும். இந்தக் காருக்கான இறக்குமதி வரியாக 93 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
-Metro News-