குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட என்ன காரணம்?

0
183

பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக எந்த முயற்சிகள் செய்தாலும் குழந்தைகளுக்கு சளி பிரச்சனைகள் மட்டும் தீரவே தீராது. இந்த சளி தொல்லைகள் அதிகமானால், மூச்சு விடுவதில் அதிக சிரமப்படுவார்கள்.

குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் எதனால் ஏற்படுகிறது?

குழந்தைகள் பிறக்கும் போதே உருவாகியுள்ள அடினாய்டு எனப்படும் சதைக்கோளமானது மூக்கு மற்றும் தொண்டையை சேரும் இடத்தில் உள்ள நிணநீரில் உள்ளது. இந்த சதைக்கோளம், குழந்தைகளை நோயில் இருந்து காப்பதற்காகவே அமைந்திருக்கிறது. குழந்தைகள் சுவாசிக்கும் போது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உடலின் உள்ளே சென்று தாக்கத்தை ஏற்படுத்தாமல் அடினாய்டி தடுக்கிறது.

குழந்தைகள் தங்களுடைய 5 முதல் 7 வயதின் வளர்ச்சி நிலைகளை அடைந்தவுடன் அடினாய்டின் வளர்ச்சி நிலை சுருங்கி செயலிழக்கும் தன்மையைப் பெறுகிறது. மேலும் குழந்தைகளின் வளர்ச்சி குறிப்பிட்ட வயதை அடைந்ததும் அடினாய்டு முழுவதுமாக நீங்கிவிடும்.

நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஆரோக்கிய உணவுகளின் மூலம் அவர்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு அடினாய்டுக்கு பதிலாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

அடினாய்டுகள் சில நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் நொய்த் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. அப்போது குழந்தைகளின் தொண்டை பகுதிகளில் சிறிய வீக்கம் ஏற்பட்டு அழற்சி போன்று உருவாகி சளித் தொல்லைகள் உண்டாகிறது.

குழந்தைகளின் மூச்சுத் திணறலால் ஏற்படும் விளைவுகள்

அடினாய்டுகளின் அழற்சி காரணமாக குழந்தைகளுக்கு சளி பிடித்து மூக்கு அடைத்துக் கொள்கிறது.

அடினாய்டின் மூலம் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கம் பெரிதாகும் போது குழந்தைக்கு மூக்கு அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடமுடியாமல் வாய் வழியாக சுவாசிக்கும். எனவே குழந்தைகள் வாய் வழியாக சுவாசிப்பதால் பற்கள் சீரற்று காணப்படுகிறது.

குழந்தைகள் மூச்சுத் திணறலால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் இருக்கும்.

குழந்தைகள் இரவில் தூங்கும் போது குறட்டையும் தூக்கமின்மையும் ஏற்படும்.

அடினாய்டு பிரச்சனையால் சில குழந்தைகளுக்கு காதில் வலி மற்றும் குடைச்சல் ஏற்படும்.

அடினாய்டில் ஏற்படும் அழற்சி காரணமாக டான்சில் பிரச்சனையும் தோன்றும், தொண்டை வலி ஏற்படும்.

-Malai Malar0

LEAVE A REPLY