போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

0
156

( -ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் வீதி நாடகத்தைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை வழரையில் விழிப்புணர்வு வீதி ஊர்வலம் நடைபெற்றது.

கொலைகார சிகரட் கம்பனியின் பசி தீர்க்க எம்மக்கள் பட்டினி கிடக்க வேண்டுமா?, போலி அதிகரிப்பு வேண்டாம் ஜனாதிபதியின் 90 வீத வரியை அமுல்படுத்து, ஜனாதிபதியும், சுகாதார அமைச்சரும் இணைந்து வெளியிட்ட சிகரட் மீதான 90 வீதமான வரி அதிகரிப்பு கபினட் பேப்பர் இன்னும் ஆலோசனைக்கு வராதது ஏன்? , அரசே சிகரட் பிடித்து எம்மக்கள் சீரழிவதை நிறுத்து, இலங்கையில் புகைத்தலால் நாளென்றிற்கு 60 தொடக்கம் 70 பேர் உயிரிழக்கின்றனர் அத்தனை குழும்பங்களின் நிலை என்ன? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

போதைப் பொருளை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதற்கான ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை அருகில் வைத்து பொதுமக்களிடம் கையெளுத்துக்களும் பெறப்பட்டன.

இலங்கையில் நாளொன்றிற்கு 60-70 பேர் புகைத்தலினால் உயிரிழக்கின்றனர், அது மட்டுமல்லாமல் தினமும் 14-16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இவ் கொடிய புகைத்தல் பழக்கத்திற்கு உள்வாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கின்றது.

இக் கொடிய புகைத்தல் பழக்கத்தினை எமது நாட்டில் இருந்து களைந்தெறிவதற்காக ஜனாதிபதியினுடைய“போதைப்பொருள் அற்ற நாடு” எனும் தொனிப்பொருளில் பல நிகழ்ச்சித்திட்டங்கள் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந் நிகழ்ச்சித்திட்டங்களிற்கு சக்தியூட்டும் முகமாகவும், புகையிலை உற்பத்தி மீதான வரியினை 90 வீதம் உயர்த்தும் ஜனாதிபதியினுடைய குறிக்கோளினை பலப்படுத்தும் முகமாகவும் மேற்குறிப்பிட்ட நிகழ்வு ஊடகாக எமது அமைப்பு எதிர்பார்க்கின்றது. என பூதினமல் எனும் அமைப்பின் மட்டக்களப்புக் கிளையின் இணைப்பாளர் ந.சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், களுவாஞ்சிகுடி பொலிசார், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை, பூதினமல் அமைப்பு, பாடசாலை மாணவர்கள், லயன்ஸ கழகத்தினர், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY