நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பித்து வைப்பு

0
154

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அத்தாபெந்திவெவ பகுதியில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் காணப்படுவதால் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பதியினால் நேற்று திறந்து (27) வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து முதலமைச்சரின் நிதியிலிருந்து 25 மில்லியன் ஒதுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் கலந்து கொண்ட மாகாண காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி இக்கிராமத்தில் கடந்த காலங்களில் சிறு நீரக நோயினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

இந்த நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பித்தோம்.

கிராமத்திலுள்ள அனைவரும் இதனை பாதுகாக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY