முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மதின் ஒருங்கிணைப்பாளர் ஹஸன் அல் – பாஸி வபாத்

0
180

(எம்.எஸ்.எம். சாஹிர்)

உணர்வுபூர்வமாகவும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் வாழ்நாள் முழுவதும் உழைத்த அல் – ஹாஜ் ஹஸன் அல் – பாஸி ஷரீப் இன்று ( 27) செவ்வாய்க்கிழமை அதிகாலை 78ஆவது வயதில் காலமானார்.

அன்னாரின் மறைவு குறித்து முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,

3 ஆண் பிள்ளைகளின் தந்தையான ஹஸன் அல் – பாஸி ஷரீப், சர்வதேச வை.எம்.எம்.ஏ யை ஆரம்பிப்பதில் மிகவும் ஈடுபாடு கொண்டு உழைத்ததோடு. அதன் ஸ்தாபகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். மறைந்த மர்ஹும் அஷ்ரப் ஹுசைன் ஜனாஸா சேவையை ஆரம்பித்த பொழுது அதற்கு பெருந்துணையாக இருந்தார். சமூக சேவையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

மத்தேகொட வீட்டுத்திட்டத்தில் ஒரு பள்ளிவாசலை உருவாகுவதற்கு பாடுபட்டு உழைத்தார். அத்துடன் ஏழை மக்களுக்கு வருடா வருடம் பற்பல மத முக்கிய தினங்களில் உலர் உணவு போன்றவைகளையும், நாற்காலிகளையும் ஏனைய வசதிகளையும் வழங்குவதில் கைதேர்ந்தவராகக் காணப்பட்டார்.

சமூக சேவை அவருக்கு கைவந்த கலை. முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மதின் ஒருங்கிணைப்பாளராக முன்பு பணியாற்றிய ஹஸன் அல் – பாஸி ஷரீப், இறக்கும் பொழுது அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய பாராளுமன்ற விவகார தொடர்பு அதிகாரியாகக் பணியாற்றினார். நல்ல ஆங்கில வளமுள்ளவர். கிரிக்கட் விளையாட்டின் ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் நேரடி வர்ணணை செய்வதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மிகவும் பிரபலமான கும்பான் ஷரீபின் புதல்வரான இவர், சென்ற 40 ஆண்டு காலமாக நாட்டின் தேசிய தலைவர்களோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்.அவரது ஜனாஸா இன்று மாலை தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அன்னாருடைய மறைவையிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது அனுதாப செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் அஸ்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY