பணம்

0
306

(Mohamed Nizous)

வாழ்க்கை
வண்டியோட
அச்சடித்த தாளால் ஒரு
அச்சாணி.
அந்த
அச்சாணி தேய
அநேகம் பேருக்கு
மச்சானும் கசக்கும்
மனைவியும் சலிக்கும்.

புரியாத பசிக்கும்
புரியாணி ருசிக்கும்
இடையில் இருக்கின்ற
இலக்கக் கடதாசி.
இலக்கம் கூட
இலக்குகளும் கூடும்.
தேயும் போது
காயும் வயிறு.

கன்றி விட்டு
கன்றி சென்று
பன்றி மேய்த்து உழைக்கவும்
கன்றை விட்டு
தாய் பிரிந்து
கட்டார்க்கு செல்லவும்
ஒன்றே காரணம்
உழைக்கனும் பணம்.

சாரிக்கு ஏற்றால் போல்
காரின் கலர் மாற்றவும்
சேரிக்குள் சேற்றுக்குள்
செத்துப் பிழைக்கவும்
காரணமாய் அமைவது
காசு பணம் தானுங்கோ
மாறுமோ இந்த நிலை
தீருமோ வறுமைக் களை

சீமானாய் ஆவதற்காய்
ஈமானாய் இழப்பவரும்
வறுமையின் வாசலிலே
பொறுமையாய் இருப்பவரும்
ஒரு நாள் மறைவார்
உள்ள பணம் கை மாறும்
அத்துடன் முடியும்
சொத்துடன் பணமும்.

LEAVE A REPLY