கத்தார் பாடசாலையில் தொங்கிய இஸ்ரேலின் கொடியால் சர்ச்சை… கொடியை உடனடியாக நீக்கிய கத்தார் கல்வி அமைச்சு.

0
637

கத்தாரில் இயங்கி வரும் பழமைவாய்ந்த பிரிட்டிஷ் பாடசாலை வயது 3 தொடக்கம் 18 வரையிலான சுமார் 1800 மாணவர்கள் கொண்ட பாடசாலை ஆகும்.

குறிப்பிட்ட பாடசாலையில் நிறுவகத்தினரால் தொங்க விடப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டு கொடியை பார்த்த மாணவர்களின் பெற்றோர்கள் கத்தார் கல்வி அமைச்சிடம் அளித்த புகாரை அடுத்து குறிப்பிட்ட இஸ்ரேல் நாட்டு கொடி பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் “புதிய கல்வி ஆண்டு” தினத்தை முன்னிட்டு ஐநா சபையில் அங்கம் வகிக்கும் அணைத்து நாட்டு கொடிகளையும் பாடசாலை வகுப்பறைகளில் தொங்கவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இந்த சம்பவத்திட்டக்கு பாடசாலை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

SHARE
Previous articleஃபலூடா
Next articleபணம்

LEAVE A REPLY