நிதியமைச்சர் உட்பட 14 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

0
170

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 14 பேரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை நீதபதி விஜித மல்கொட மற்றும் பிரீதி பத்மன் சுரசேன ஆகியோர் இன்று (26) பிறப்பித்துள்ளனர்.

குறித்த மனுவில் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சுங்க பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இடம்பெற்ற மோசடியொன்று தொடர்பில் குறித்த மனு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை சிங்கள தேசிய முன்னணி மற்றும் ஆறு கட்சிகள் இணைந்து தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Virakesari-

LEAVE A REPLY