காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் 6.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

0
153

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கி வருகின்ற காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 6.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை நிர்வாகம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ்விடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக அவரது சிபாரிசின் பேரில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் நிழவும் வகுப்பறை பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் முகமாக இந்நிதி, வகுப்பறை கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீட்டுக் கடிதம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கு அமைய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளரினால் மட்டு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY