உம்ரா பருவகாலத்தை 10 மாதங்களாக நீடிக்க சவூதி அரசாங்கம் உத்தேசம்

0
272

(எம்.ஐ.அப்துல் நஸார்)

தற்போது எட்டு மாதங்களாக உள்ள உம்ரா பருவ காலத்தை 10 மாதங்களாக நீடிப்பதற்கான அரசாங்கத்தின் யோசனை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மக்கா மற்றும் மதீனாவுக்கான புதிய தூரநோக்கின் அடிப்படையிலமைந்த இந்த யோசனையின்படி, உம்ராக் கடமைகள் நிறைவேற்றப்படும் மாதங்களாக முஹர்ரம் மற்றும் ஷவ்வால் ஆகிய மாதங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உம்ராவுக்கான வீசாக்கள் ஸபர் மாதம் தொடக்கம் ரமழானின் இறுதிப் பகுதி வரையான காலப்பகுதிக்கே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த யோசனை, 2030ஆம் ஆண்டு உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை 8 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக அதிகரிக்கச் செய்யும் 2030ஆம் ஆண்டுக்கான சவூதியின் தூரநோக்கின் இலக்குகளுக்கு அமைவாக முன்வைக்கப்பட்டுள்ளது.

நூதனசாலைகள், வரலாறு மற்றும் கலாச்சாரத் தலங்களை நிர்மாணிப்பது மற்றும் விரிவுபடுத்துவதனூடாக சவூதி ஆரேபியாவில் யாத்திரிகர்களின் சமய மற்றும் கலாச்சாரப் பயணத்தினை மேம்படுத்துவதே இந்தத் தூரநோக்கின் அடிப்படையாகும்.

இந்ததந் தூரநோக்கிற்கு அமைவாக உலகின் மிகப்பெரும் இஸ்லாமிய நூலகம் உருவாக்கப்படவுள்ளது. செழிப்புமிக்க இஸ்லாமிய வரலாறு தொடர்பில் வருகை தருவோருக்கு விளக்குவதற்காக அதற்கான பொருட்களும் ஆவணங்களும் சேரிக்கப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டு, காட்சிப்படுத்தப்படும்.

இதனிடையே, ஹஜ் மற்றும் உம்ராவின்போது, அனைத்து வர்த்தகத்துறையினையும் நிலைத்திருக்கத்தக்க வகையில் வளர்ச்சியடையச் செய்வதற்கான வழிவகைகள் பற்றி விரிவாக ஆராய்வதற்காக  மக்கா வர்த்த மற்றும் கைத்தொழில் சம்மேளனம் செயலமர்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தது.

‘அடுத்த தடவை, மக்காவில் உலக முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சிக்கு அமைவாக பிரமாண்டமான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்’ என மக்கா வர்த்த மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தவிசாளர் மாஹிர் ஜமால் தெரிவித்தார்.

உலகளாவியரீதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 1.63 பில்லியனாகும். இது உலக சனத் தொகையில் 23 வீதமாகும்.

‘2030ஆம் ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை 8 மில்லியனில் இருந்து 30 மில்லியனாக அதிகரிக்கச் செய்தல் என்ற எதிர்பார்ப்பு புத்திசாதுரியமிக்க எமது தலைமைத்துவத்தால் ஊக்கப்படுத்தப்படும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரையின் வசதிகளை இலக்காகக்கொண்டு, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சுக்கான தந்திரோபாய இலக்குகளாக தேசிய மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் 2020 முன் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY