சத்தான கார்ன் – பட்டாணி சாலட் செய்வது எப்படி?

0
220
தேவையான பொருட்கள் :
பட்டாணி – 1 கப்
கார்ன்/சோளம் – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துருவிய சீஸ் – சிறிது
செய்முறை :
* பட்டாணி, கார்ன்/சோளத்தை வேக வைத்து கொள்ளவும்.
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் பட்டாணி மற்றும் சோளத்தைப் போட்ட பின் அதில் வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதன் மேல் துருவிய சீஸை தூவி நன்கு கலந்து பரிமாறவும்.
* பட்டாணி கார்ன் சாலட் ரெடி
-Malai Malar-

LEAVE A REPLY