தனது நண்பியின் தந்தையினால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: நண்பியின் தந்தை கைது; சிறுமி வைத்தியசாலையில்

0
1926

(விசேட நிருபர், முஹம்மட் பயாஸ்)

காத்தான்குடி ஹைராத் நகரில் பாடசாலை சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிசார் இன்று (27) காலை கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி ஹைராத் நகரைச் சேர்ந்த பத்து வயது சிறுமியொருவர் அதே பகுதியிலுள்ள தனது நண்பியின் வீட்டுக்கு நேற்று மாலை (26) விளையாடச் சென்றுள்ளார்.

இதன் போது அந்த நண்பியின் தந்தையான குடும்பஸ்தர் இந்த சிறுமியை அவரின் வீட்டில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதனை குறித்த சிறுமி தனது வீட்டுக்கு வந்து தாய் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த குடும்பஸ்தரை காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

குறித்த சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (27) மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY