கொழும்பில் எச்.ஜ.வீ பற்றிய பயிற்சி

0
149
(அப்துல்சலாம் யாசீம்-)
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகளுக்கான எச்.ஐ.வி  எயிட்ஸ் பற்றிய பயிற்சி செயலமர்வு எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 3ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து 5ஆம் திகதி வரை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி செயலமர்வில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதிகரித்து வரும்  எச்.ஐ.வி ஃஎயிட்ஸ் பாவனையை தடுத்தல் மற்றும் கைதிகளுக்கு எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். மற்றும் புதிதாக வருகின்ற சிறைக்கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகளுக்கு நோய்யின் தாக்கத்தினை தெளிவுபடுத்தல் .போன்ற விடயங்கள் இந்பயிற்சி செயலமர்வில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இப்பயிற்சி செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY