உலகத்தில் 90 சதவீத மக்கள் மாசு காற்றை சுவாசிக்கின்றனர்: உலக சுகாதார அமைப்பு தகவல்

0
156

உலகத்தில் உள்ள 90 சதவீத மக்கள் மாசு காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்கு பசிபிக் நாடுகள்தான் அதிக மாசுபாடு அடைந்த நாடுகளாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியாவில் வாகனங்கள் வெளியிடும் புகையால் 70 சதவீத காற்று மாசுபாடு ஏற்படுகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவு காற்று மாசு அடைந்துள்ளது. இரு சக்கர வாகனத்தை ஒரு நாள் பயன்படுத்தும் போது 8000 கிராம் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறுகிறது.

நெருங்கிய வீடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை எரித்தல், செங்கல் சூளைகள்,சுண்ணாம்புக் காளவாய்கள், இரசாயன தொழிற்சாலைகள், புகையை ஏற்படுத்தும்காட்டுத்தீ போன்றவற்றால் வரும் புகையால் காற்று மண்டலம் மாசடைந்துள்ளது. சீனா தலைநகரான பெய்ஜிங் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 21 சிகெரட்டை பிடிப்பதற்கு சமம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு  காற்று மாசடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-Dinakaran-

LEAVE A REPLY