கந்தானையில் இடமபெற்ற விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

0
261

கந்தானை திபிரிகஸ்கட்டுவ பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மீகமுவ – திவுலபிட்டிய பிரதான வீதியின் கந்தானை திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் வாகனம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 46 வயது மற்றும் 28 வயதுடைய இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் கொள்கலன் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

-NF-

LEAVE A REPLY