‘புகலிடம்’ மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திப் பொருள் விற்பனை

0
162

dsc01637(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

‘புகலிடம்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காக பாடுபடும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 8 மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்படும் மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திகளை விற்பனைக்கிட்டுள்ளதாக அதன் சமூகமட்ட புனர்வாழ்வு பணியாளர் நாகையா கீதா தெரிவித்தார்.

செங்கலடியில் நேற்று (25) ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற இந்த மாற்றுத் திறனாளிகள் உற்பத்திப் பொருள் கண்காட்சி மற்றும் விற்பனையில் மாற்றுத் திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட துடைப்பம், பூ அலங்காரங்கள், மனைப் பாவனைப் பொருட்கள், பணப்பைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் என்பன இடம்பிடித்திருந்தன.

dsc01605மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘புகலிடம்’ எனும் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு போரதீவு, களுதாவளை, ஆரையம்பதி, கொக்குவில், தன்னாமுனை, செங்கலடி, சித்தாண்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய 8 இடங்கிளில் 141 மாற்றுத் திறனாளிகளைப் பராமரித்து, பயிற்சி வழங்கி வருவதோடு அவர்களை சுய தொழில் உற்பத்திக்கும் ஊக்குவித்து வருவதாக நாகையா கீதா மேலும் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளி உற்பத்திப் பொருள் விற்பனை மற்றும் கண்காட்சி நிகழ்வில் புகலிடம் நிறுவன பணிப்பாளர் எஸ்.எஸ். ரெரன்ஸ், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் பி. ராஜமோகன், மெதடிஸ்ற் தேவாலய அடிகளார் எஸ். சுவேந்திரன் புகலிடம் அமைப்பின் சமூகமட்ட புனர்வாழ்வு பணியாளர் நாகையா கீதா உட்பட அதன் ஏனைய அலுவலர்களும் மாற்றுத் திறனாளிகளான உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

dsc01595

LEAVE A REPLY