ஒக்டோபர் 10ம் திகதிக்கு பின்னரே பருவப்பெயர்ச்சி மழை

0
712

அடுத்த மாதம் 10ம் திகதிக்கு பின்னரே இடைக்கால பருவப்பெயர்ச்சி மழைக்காலநிலை ஆரம்பமாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்த பருவப்பெயர்ச்சி கால மழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடம்பெறும் என்று திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்திற்கு பின்னர் இலங்கையில் போதுமான மழைவீழ்ச்சி இடம்பெறவில்லை. ஹம்பாந்தோட்டை மொனறாகலை பொலநறுவை அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்பொழுது வறட்சியுடன் கூடிய காலநிலை நிலவிவருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Source: News.lk

LEAVE A REPLY