(Poem) பிர(ற)யோசணங்கள்

0
97

(நிஷவ்ஸ்)

புத்தகம் வாங்கு
ஆடும் கதிரைக்கு
அடை கொடுக்க உதவும்.

பென்சில் வாங்கு
பிளக்கை சொருக
பிரயோசனப் படு பொருள்

பேனை வாங்கு
மூடியால் காதினுள்
முடிந்த வரை சொறியலாம்.

கொப்பி வாங்கு
வேர்க்கும் நேரம்
விசிறியாய் மாறும்.

பத்திரிகை வாங்கு
பகல் உணவு உண்ண
பார்சல் கட்டலாம்.

பிரிஜ் வாங்கு
நகையை ஒழிக்க
நல்லதோர் இடம்.

பெரிய சகன் வாங்கு
குசினித் தாக்குதலை
கொஞ்சம் தடுக்கலாம்:-)

செருப்பு வாங்கு
பூரான் வந்தால்
வீரமாய்க் கொல்லலாம்.

கொமட் வாங்கு
பிறர் தொல்லையின்றி
பேஷ் புக் பார்க்கலாம்.

கார் வாங்கு
ஷெல்பி போடும்
சீனுக்கு முக்கியம்.

பைக் வாங்கு
உள்ள சண்கிளாஸ்களை
ஊருக்குக் காட்டலாம்.

ஜிம் சைக்கிள் வாங்கு
உடுப்பைக் களைந்து போட
உகந்த சாதனம்.

அண்ணன்மார்கள்
ஆழமாய் யோசித்து
பண்ணும் வேலைகள்
பல்வகை உண்டு.
இன்னும் எழுதலாம்
இன்னொரு ஆக்கத்தில்…..

LEAVE A REPLY