மடப்பள்ளி இனந்தெரியாதோரினால் தீக்கிரை

0
293

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-வெறுகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லடி மலை நிதியம்மன் இந்து ஆலயத்தின் மடப்பள்ளி இன்று (26) காலை இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்து ஆலயத்தின் பூசைப்பொருற்களை பாதுகாத்து வைக்கும் மடப்பள்ளி முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் கல்லடி றஜமஹா விகாரையில் சுத்திகரிப்பு உதவியாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

விகாரையின் குப்பைகளை தீ வைத்த வேளை தீ பரவியமையினால் மடப்பள்ளி தீப்பற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

தீப்பற்றியமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

14432977_1767811030134339_6643668246690748448_n 14433047_1767810886801020_5236326907919589968_n 14448848_1767810936801015_6836987081733103535_n

LEAVE A REPLY