ஏறாவூர் பொலிஸ் பிரிவு விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

0
295

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

pageமட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை (செப்ரெம்பெர் 25, 2016) இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்டு அதன் சாரதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து செங்கலடி நோக்கி வந்து கொண்டிருந்த செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த செல்வராசா மகேஸ்வரன் (வயது 34) என்பவரே படுகாயமடைந்த நிலையில் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தலையில் பலமான அடிபட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. படுகாயமடைந்தவரிடம் வாக்குமூலம் பெறமுடியாதளவில் அவர் நினைவிழந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேதமடைந்த முச்சக்கர வண்டியை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்த மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY