சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது மேற்கிந்தியத் தீவுகள்

0
240

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெற்­று­வரும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் முத­லி­ரண்டு போட்­டி­களில் அமோக வெற்­றி­யீட்­டிய பாகிஸ்தான், மூன்று போட்­டிகள் கொண்ட தொடரை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

துபாய் சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் வெள்­ளி­யன்று நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் 9 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான், நேற்­று­முன்­தினம் இரண்­டா­வது போட்­டியில் 16 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்று தொட­ரையும் கைப்­பற்­றி­யது.

இரண்­டா­வது போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் 20 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 160 ஓட்­டங்­களைக் குவித்­தது.  அணித் தலை­வரும் விக்கெட் காப்­பா­ள­ரு­மான சார்வ்ராஸ் அஹ்மத் ஆட்­ட­மி­ழக்­காமல் 46 ஓட்­டங்­க­ளையும் காலித் லத்தீப் 40 ஓட்­டங்­க­ளையும் ஷொயெப் மாலிக் 37 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் 20 ஓவர்­களில் 9 விக்­கெட்­களை இழந்து 144 ஓட்­டங்­களைப் பெற்று தோல்­வியைத் தழு­வி­யது.

ஒன்­பதாம் இலக்க வீரர் சுனில் நரின் மாத்­தி­ரமே திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்தார். அவர் 17 பந்­து­களை எதிர்­கொண்டு ஒரு சிக்சர், 4 பவுண்ட்­றிகள் அடங்­க­லாக 30 ஓட்­டங்­களை விளா­சினார். முன்­வ­ரி­சையில் அண்ட்றெ ப்ளெச்சர் 29 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுத்தார். பந்­து­வீச்சில் சொஹெய்ல் தன்விர் 13 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் ஹசன் அலி 49 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­க­ளையும் வீழ்த்­தினர்.

முத­லா­வது போட்­டியில் 14 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களை வீழ்த்த ஆட்­ட­நா­ய­க­னான இமாத் வசி­மினால் இப் போட்­டியில் ஒரு விக்­கெட்டை மாத்­தி­ரமே வீழ்த்த முடிந்­தது. இரண்­டா­வது போட்­டியில் சார்வ்ராஸ் அஹ்மத் ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபது 20 கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நாளை நடைபெறவுள்ளது.

-Metro News-

 

LEAVE A REPLY