இந்தியாவில் மீண்டும் ஒரு சம்பவம்: தாயின் சடலத்தை சுமந்த மகள்கள்: அதிர்ச்சி சம்பவம்

0
312

இந்தியாவில்  ஒடிசா மாநிலம், கலாஹான்டி மாவட்டத்தை சேர்ந்தவர் கன சதாபதி (75) .தொழு நோயாளியான இவரின் கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

வயது முதிர்ந்த பெண்மணியான கன சதாபதி தன்னுடய நான்கு மகள்கள் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். கணவர் அவரை பிரிந்து சென்றதலிருந்தே அவர் உறவினர்களும், ஊர் மக்களும் அவர் குடும்பத்துடன் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென கன சதாபதி காலமானார். உறவினர்கள் வருவார்கள் அவர்கள் உதவியுடன் தங்கள் தாயின் சடலத்தை அடக்கம் செய்யலாம் என காத்திருந்த நான்கு மகள்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

அவர்கள் யாரும் உதவிக்கு வராத நிலையில் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து தங்கள் தாயின் சடலத்தை தூக்கி கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மனைவி சடலத்தை எடுத்து செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால் கணவன் சடலத்தை தோளில் தூக்கி சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

-Daily Thanti-

LEAVE A REPLY