அட்டாளைச்சேனையில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க கழகங்கள் முன்வர வேண்டும் – அமைச்சர் நஸீர்

0
197
அட்டாளைச்சேனையின் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் மின்னொளி இரவு நேர கிறிக்கெட் சுற்றுப்போட்டிகள் 03 மாதத்திற்கு ஒரு முறை நடைபெற வேண்டும் அதற்கு ஒத்துழைப்புக்களை விளையாட்டுக்கழகங்கள் வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார். அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகம் நடாத்திய ”மர்ஹூம் மசூர் சின்னலெப்பை” மின்னொளி கிறிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு 24ஆம் திகதி இரவு கழகத்தின் தலைவர் பத்தஹ் ஆசிரியர் தலைமையில் அட்டாளைச்சேனை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது அதன் போது மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
அன்மைக்காலமாக இம்மாதம் தொடர்ந்தேர்சியாக எமது பிரதேசத்தின் பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகின்றது . இதன் மூலம் அதிகமாக முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறுகின்றது இதனை தடை செய்ய வேண்டும் எனக்கோரி ஆகவே இதனை நாம் இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்வதை நிறுத்த் வேண்டும் எனவும் இதனை நாம் 03 மாதத்திற்கு ஒரு முறை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் அசெளகரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளமுடியும் என தெரிவித்தார். குறிப்பாக இதன் மூலம் மாணவர்களின் கல்விச்செயற்படுகள் இன்று மந்தகெதியில் செல்கின்றது ஆகவே நாம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாறு தொடர்ந்தேர்ச்சியாக மேற்கொள்கின்ற சுற்றுப்போட்டிகளை குறைத்துவிட்டு மாதங்களின் பின் மேற்கொள்வதற்கு அனைத்து கழகங்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்கின்றோன்.
அதுபோல் அட்டாளைச்சேனையில் இருந்து செயற்படுகின்ற விளையாட்டுக்கழங்கங்கள் இன்று மிகவும் சிறப்பாக விளையாட்டுத்துறையில் செயற்படுவதுடன் அவர்களின் ஏனைய பொது நல விடையங்களிம் அதிகமான அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.இவ்வாறான செயற்பாடுகள் இன்னும் அதிகரிப்பதும் கல்விக்கும், நமது மார்க்க விடையங்களுக்கும் அதிகமான அக்கறை செலுத்தி விளையாட்டுக்கழங்கள் ஒற்றுமையுடன் செய்ற்பட வேண்டும்.
விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி தோல்வி என்பது ஓர் பாரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் எதையும் எதிர்நோக்கும் தைரியம் எம்மிடம் இருக்க வேண்டும் அது இந்த பிரதேச கழகங்களிடைய காணப்படுகின்றது அதனை இன்னும் சீராக பின்பற்றி வெற்றி, தோல்வியை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றது அது போல் இன்று இதனை மசூர் சின்னலெப்பை நினைவுநாளா ஞயாபகமூட்டி மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய அனைவருக்கும் நன்றியைத்தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை சோபர் அணியும், அக்கரைப்பற்று ரஹீமியா அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்ததில் அக்கறைப்பற்று ரஹீமியா அணி பெற்று சின்னத்தினையும் பணப்பரிசினையும் பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY