காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா

0
279

(விசேட நிருபர்)

காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழா(2016) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 23.9.20106 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

காத்தான்குடி கலாசார அதிகார சபை மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பேரவை ஆகிய வற்றின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.கிரீதரன் கலந்து கொண்டார். அத்துடன் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.பாயிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

dfஇதன் போது கலை கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுகதை நாடகம் என்பவற்றுக்காக கே.எம்.ஏ.முகம்மது நவவி மற்றும் நாடாரியல் கலை துறைக்காக ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளரும் சமூக சேவையாளருமான எஸ்.எம்.பி.முகைதீன், மற்றும் கவிதை துறைக்காக ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.சித்தீக் மற்றும் ஆக்க இலக்கியத்திற்காக ஜனாபா சித்தி ஜாயிதா ஜலால்தீன் ஆகிய நான்கு பேருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY