(Photos) காத்தான்குடி கடற்கரையில் ஜனாஸா மீட்பு

0
4983

dscn0287(விஷேட நிருபர்)

காத்தான்குடி கடற்கரையில் இன்று (26) திங்கட்கிழமை காலை சிறிய வாகனமொன்றிலிருந்து ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடற்கரையில் பட்டா எனப்படும் சிறிய வாகனமொன்றிலிருந்து ஜனாஸா ஒன்றை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறி ஏற்றி காத்தான்குடிக்கு வருகை தந்த வாகனத்திலேயே அந்த ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த ஜனாஸா கல்முனைக்குடி சாய்பு வீதியைச் சேர்ந்த எம்.எம்.பாறூக் (62) என்பவரின் ஜனாஸா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஜனாஸா தற்போது குறித்த வாகத்தில் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

dscn0282 dscn0285

LEAVE A REPLY