தோப்பூர் விபத்து: லொறி சாரதிக்கும் மோட்டார் சைக்கில் செலுத்திய சிறுவன் நிஜாம்தீனுக்கும் மறியல்

0
577

thoppur-accident(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை-தோப்பூர் செல்வநகர் பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனும் டிப்பரின் சாரதியும் மூதூர் பதில் நீதவான் இல்யாஸ் முபாரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நீதவானின் உத்தரமைவிற்கமைவாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் தோப்பூர்-செல்வநகர் பகுதியைச்சேர்ந்த குறித்த சிறுவனை (நிஜாம்தீன் சப்ராஸ் 14 வயது) சிறைச்சாலை பராமரிப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் டிப்பரின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் ஜனாஸா சட்டவைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மெற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY