பாகிஸ்தான் ஒருநாள் அணியில் மீண்டும் உமர் அக்மல், ஆசாத் ஷபிக்

0
171

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் துபாய் மற்றம் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இது முடிந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (செப்டம்பர் 30, அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 5) நடக்க இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவிலும், கடைசி போட்டி அபுதாபியிலும் நடக்கிறது.

இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உமர் அக்மல், ஆசாத் ஷபிக் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

முன்னணி பேட்ஸ்மேன் ஆன உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் கடைசியாக இடம்பிடித்திருந்தார். அதன்பின் தங்போதுதான் அவருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கான பயிற்சி முகாமில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக உமர் அக்மல் அணியில் சேர்த்துக் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதன்பின் தற்போது எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடாமல் இருப்பதால் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆசாத் ஷபிக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜிம்பாப்வே அணிக்கெதிராக கடைசியாக இடம்பிடித்திருந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இடம்கிடைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணிகள்:-

1. அசார் அலி (கேப்டன்), 2. ஷர்ஜீல் கான், 3. பாபர் அசாம், 4. ஆசாத் ஷபிக், 5. சோயிப் மாலிக், 6. சர்பிராஸ் அகமது, 7. உமர் அக்மல், 8. மொகமது ரிஸ்வான், 9. மொகமது நவாஸ், 10. இமாத் வாசிம், 11. யாசீர் ஷா, 12. ரஹத் அலி, 13. மொகமது ஆமீர், 14. வஹாப் ரியாஸ், 15. ஹசன் அலி, 16. சோகைல் கான்.

LEAVE A REPLY