காத்தான்குடி கோட்டப் பாடசாலைகளின் தேவைகளை நேரடியாகச் சென்று கேட்டறிந்த முதலமைச்சர்

0
254

img_6003(விஷேட நிருபர்)

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை சரியான முறையில் சரியான இடங்களுக்கு வழங்கிவைத்து அதற்கான வேலைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று காலை 9.00 மணிக்கு காத்தான்குடிக்கு விஜையம் செய்தார்.

காத்தான்குடி அல் ஹிரா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட காத்தான்குடி கோட்ட பாடசாலை அதிபர்கள், அபிவிருத்திக்குழுவினர் ஆகியோரை அழைத்து கலந்தாலோசனைக் கூட்டம் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏசி.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு அதிபர்களும் தங்களின் பாடசாலைகளின் தேவைகளையும், குறைகளையும் எடுத்துக்கூறினர். அனைத்து பாடசாலைகளுக்குமான தேவைகளைப்பூர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என இக்கலந்துரையாடலில் முதலமைச்சர் எடுத்துகூறினார்.

இந்நிகழ்வில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சேகு அலி மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

img_5999 img_6002

LEAVE A REPLY