டிப்பர் வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் பலி

0
276

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை.சேறுநுவர பொலிஸ் பிரிவுற்குற்பட்ட செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும். மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று (25) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தோப்பூர்-செல்வநகர் நூறூ வீட்டுத்திட்டம் பகுதியைச்சேர்ந்த 15-16 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பயணித்ததாகவும் இருவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY