சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியை பெற்றுத்தர வேண்டும்: கிராம மக்கள் வேண்டுகோள்

0
216

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை.மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுற்குற்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் கடந்த யுத்தகாலத்தின் போது செய்கை பன்னப்பட்டு வந்த சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதியை பெற்றுத்தர வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரொட்டவெவ கிராமமக்கள் சேனைப்பயிர்ச்செய்கை .மீன்பிடி .விவசாயம் போன்றவற்றையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

unnamed-2500 குடும்பங்களைச்சேர்ந்த மக்கள் விவசாயத்தை மேற்கொள்வதற்கு குளத்தில் நீரின்றி அவதியுறும் காலகட்டத்தில் பருவ மழையை நம்பி தாம் கடந்த 30 வருடங்களாக மேற்கொண்டு வந்த இடங்களில் சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலையில் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் தடுக்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்த காலத்திலிருந்து மேற்கொண்டு வந்த காடுகள் அரசுக்கு சொந்தமான காடுகள் என கூறுவதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் சிறியளவில் காணப்படுகின்ற காடுகளை துப்பரவு செய்யவிடாமல் தடுப்பதாகவும் அதனால் குடும்பங்களில் பிரச்சிணைகளும்- சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாகவும் சேனைப்பயிர்ச்செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாரிய காடுகளை அழித்து சேனைப்பயிர்ச்செய்கையை மேற்கொண்டால் பரவாயில்லை. நாங்கள் பல வருடங்களாக மேற்கொண்டு வந்த இந்த சேனைகளை செய்வதற்கு நல்லாட்சி அரசு அனுமதியைப்பெற்று தர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY