(Audio) விக்னேஸ்வரனின் கருத்திற்கு கிழக்கின் எழுச்சியின் செயலாளர் அஸ்ஸுஹுர் இஸ்ஸ்டீன் பதிலடி

0
346

(அஹமட் இர்ஷாட்)

hdezஅரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்த போதும் தமிழர்களாக அடையாளம் காட்டாமல் முஸ்லிம்களுக்காக அடையாளம் காட்டுகின்றார்கள் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விமர்சித்ததாக செய்தியினை காணக்கிடைக்கின்றது.

இங்கே எம் மத்தியில் இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது முஸ்லிம்கள் ஏன் தமிழர்கள் அல்லாமல் முஸ்லிம்களாக அடையாளம் காட்ட கூடாது என்பது. அப்படி முஸ்லிம்களாக அடையாளம் காட்டுவதில் என்ன தவறு இருக்கின்றது? 1880 முதலே அப்துல் அஸீஸ் அவர்களும் அறிஞர் சித்தி லெப்பை அவர்களும் முஸ்லிம்கள் தமிழர்களின் ஒரு பிரிவு அல்ல என போராடி 1889ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கான தனி பிரதி நிதித்துவத்தினை பெற்றிருந்தார்கள்.

பின் நாட்களில் அதற்கான தேவைப்பாடுகள் எழுந்திருக்காத நிலையில் 1980க்கு பின்னர் முஸ்லிம்கள் மீதான தமிழ் ஆயுதக்குழுக்களின் வன்முறைகளே முஸ்லிம்கள் தாம் ஒரு தனி தேசியம் எனும் பதத்தினை தங்களினுடைய மனதில் விதைப்பதற்கு காரணமாக அமைந்தது.

முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் முஸ்லிம்கள் மத ரீதியில் தனித்துவமானர்கள் என்பதற்காகவே நடாத்தப்பட்டன. முஸ்லிம்கள் தமிழர்கள்தான் என உதட்டளவில் கூறப்பட்டாலும் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டி அடித்தமையானது தமிழர்களின் அரசியலுக்காகவேதான்.

இனப்பிரச்சனை தீர்வு நேரத்தில் முஸ்லிம்களை தனித்தரப்பாக ஏற்றுக்கொள்ள மறுத்ததும் தமிழர்களின் அரசியலுக்காகத்தான். வடக்கு கிழக்கில் உள்ள முஸ்லிம்கள் இத்தனை உயிர் இழப்புக்களையும் சந்திக்க நேரிட்டது முஸ்லிம்கள் மத ரீதியில் தனித்துவமானவர்கள் என்பதனாலாகும். முஸ்லிம்கள் தங்களை ஆணித்தரமான தேசியமாக உறுவாக்கிகொள்ள காரணமாக இருந்தவர்கள் தமிழ் தேசியத்தின் செல்லப்பிள்ளைகளாக செயற்பட்ட ஆயுதகுழுக்கள்தான்.

இரண்டாவது கேள்வியான முஸ்லிம்கள் அரசியலுக்காக மதத்தினை அடையாளம் காட்டுவதில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற பிரச்சனை என்ன என்பது? முஸ்லிம்கள் என்னவானாலும் செய்து விட்டு போகட்டும் என்றில்லாமல் முஸ்லிம்கள் மீதான கரிசனை அண்மையில் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. ச

ம்பந்தன் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களை முதலமைச்சராக்க இணங்குகின்றார். எத்தனை தடவைகளுக்கு மேல் முஸ்லிம்களுகு முதலமைச்சர் பதவியினை விட்டுக்கொடுக்க போகின்றார்கள்? அவ்வாறு முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் எனும் பதவி ஆசையினை காட்டி தமது நோக்கங்களை நிறைவேற்றி கொள்ளலாம் என கணக்கு போட்டது சம்பந்தன் அவர்களின் அனுபவத்திற்கும், முதிர்ச்சிக்கும் அழகில்லாத விடயமாகவே இருக்கின்றது. அவர் வேறு ஏதாவது திட்டத்தினை முன்வைத்திருக்கலாம்.

அரியேந்திரனோ வடமாகாணதில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட வில்லை என அண்மையில் கண்டு பிடித்து சொல்லியிருக்கின்றார். இந்த கண்டு பிடிப்பிற்கு அவருக்கு 26 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை உயிராபத்தின்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என கூறியிருக்கின்றார்.

வெறும் இரண்டு மணித்தியாளங்களில் உயிராபத்தின்றி வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன? அப்பொழுது தடுத்து வைக்கப்பட்ட வியாபாரிகள் உயிருடன் திரும்பாதது ஏன்? முஸ்லிம்கள் தமது சொத்துக்களை கொண்டு செல்வதற்கு மறுக்கப்பட்டதும் முஸ்லிம்கள் மீது கொண்ட பேரன்பினால்தானா? அவ்வாறு விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீழ் குடியமர்த்த இன்னும் உங்கள் வடமாகாண சபையில் ஏதும் நடவடிக்கைகளோ அல்லது தீர்மாணங்களோ எடுக்க முடியாமல் இருப்பதும் உங்களுடைய அரசியல் காரணங்களுகாகத்தானே.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடகிழக்கினை சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் தலைமையுடனோ அல்லது புதிஜீவிகளோடோ எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் தான்தோன்றிதனமாக முஸ்லிம்களுக்கு தன்னாட்சி அதிகார சபையினை வழங்க பரிந்துறைந்திருப்பது முஸ்லிம்களை இன்னும் ஒரு குழுவாக மாத்திரம் அவர் கருதுதுவதினாலா? வடக்கும் கிழக்கும் இணையும் பொழுது முஸ்லிம்களுக்கான தன்னாட்சி அதிகார சபை உறுவாகும் என கூறப்படுகின்றது. ஆனால் கிழக்கு பிரிந்து இருக்க வேண்டும் என நாங்கள் தெளிவாக கூறியுள்ள நிலையில் எங்கிருந்து தன்னாட்சி அதிகார சபை அமையும்? ஆகவே இவர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் சிரமப்பட்டு சிந்தித்து உறுவாக்கி இருக்கும் விடயங்கள் எல்லாம் முஸ்லிம்கள் தங்களை மத ரீதியாக தனித்துவமாக கொள்வதன் மூலம் பிரயோசனம் அற்று போய்விடும் என்ற நிராசையில்தான் முஸ்லிம்கள் அரசியலுக்காக மதத்தினை தூக்கி பிடிக்கின்றார்கள் என அங்கலாய்த்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லாம் முஸ்லிம்களினுடைய அரசியல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது ஏன்? தமிழ் தேசியம் வடக்குடன் ஒட்டுமொத்த கிழக்கையும் முஸ்லிம்களுடன் சேர்த்து இணைக்க துடிக்கின்றது.

ஆனால் பொதுவான பாரம்பரிய வாழ்விடத்தையும், கலாச்சரத்தினையும், தனித்துவமான மொழியையும், பொதுவான பொருளாதாரத்தையும் கொண்டுள்ள வடக்கு கிழக்கினை சேர்ந்த முஸ்லிம்கள் தங்களை தனி தேசியமாக அங்கீகரிக்க கூடிய தகமைகள் இருப்பதை கண்டு அதற்காக சாய்ந்தமருதில் ஒரு பிரகடணத்தை செய்து முழு இலங்கைக்கும் மட்டுமல்லாது சர்வதேசத்திற்கும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை உரத்து சொல்லியுள்ளார்கள்.

கிழக்கு தனித்தே இருக்க வேண்டும் என்ற கிழக்கின் எழுச்சியின் கோசம் மக்கள் மத்தியில் பேராதரவினை பெற்றுள்ளது. முஸ்லிம் தலைமகள் அணைத்தும் ஒன்று பட்டு முன்னெடுப்பது தமக்கு பாதமாக இருக்கும் என்பதினால் வடக்கு கிழக்கு பற்றி எந்த உணர்வு பூர்வ அறிவும் அற்ற ஹக்கீமினை கொண்டு தனது ஆசைகளை நிறைவேற்ற பார்க்கின்றார்கள்.

இந்த இக்கட்டாண காலகட்டத்தில் அரசாங்கம் ஒரு புறமும், தமிழ் அரசியல்வாதிகள் ஒரு புறமும், இந்தியா ஒரு புறமும், சர்வதேச நாடுகள் ஒரு புறமும், தமிழ் டயஸ்போராக்கள் ஒரு புறமும் என்று இருக்கின்ற இந்த நேரத்திலே யார் நண்பன் யார் எதிரி என்று தெரியாமல் தமது எதிர் காலத்தினை என்னி கவலைப்பட்ட நிலையிலேயே கிழகு முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த சூழ் நிலைகளில் முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமையாக ஒரு மேடைக்கு வந்து பேச்சு வார்த்தை நடாத்தி முஸ்லிம்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு விடயங்களில் ஒற்றுமையாக செயற்படுமாறு கிழக்கின் எழுச்சி கோரிக்கை விடுக்கின்றது. இது தொடர்பில் பல அரசியல்வாதிகளை சந்தித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமது நலன் தமது கட்சியின் நலன் என்று குறுகிய வட்டத்திற்குள் நின்று யோசித்து முஸ்லிம் சமூதாயத்தினை அடிமைபடுத்த வேண்டாம் என மிகவும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம். இல்லை எனில் இவ்வாறானவர்களை புறம்தள்ளி விட்டு சமூகத்திற்காக ஒற்றுமயாக வர தயாராக உள்ளவர்களை கொண்டு இவ்விடயங்களை முன்னெடுக்க கிழக்கின் எழுச்சி தயாங்காது என கூறிக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY